விராட் கோலி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் தெரிந்த பிரபல பெயர். கிரிக்கெட்டில் அடுத்தடுத்து பல சாதனைகளை குவித்து தன் பெயரை எங்காவது ஒலிக்க செய்து கொண்டே இருப்பார். கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை முதல் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 வரை ரன்களை விரட்டி எதிரணிகளை மிரட்டி கொண்டிருக்கிறார். 


 இந்திய அணிக்காக இருந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிக்காக இருந்தாலும் விராட் கோலி களத்தில் இருந்தால் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு கண் கலங்கும். அந்த அளவிற்கு ரன்களை குவிப்பத்தில் வல்லவர். மேலும், போட்டியின் நடுவே தன்னுடன் விளையாடும் சக வீரர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால், முதல் ஆளாக முன்நின்று ஆக்ரோஷமாய் தட்டிக்கேட்பார். களத்திற்கு உள்ளே இந்த ஆக்ரோஷம், கோவம் என்றாலும், களத்திற்கு வெளியே இவர் செய்யும் சேட்டை அளக்க முடியாதது. 



சக அணி வீரர்கள் மட்டுமல்லாது, எதிரணி வீரர்களை ஜாலியாக கிண்டல் செய்வது. ஸ்டேடியத்தில் பாட்டு ஓடினால் எத்தனை பேர் இருந்தால் எனக்கென்ன என்று நடனம் ஆடுவது என்று துருதுருவென்று இருப்பார். இப்படி ஏதாவது ஒரு அலப்பறை செய்துகொண்டே இருக்கும் விராட் கோலி சூப்பராக பாடுவார் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால், அதுதான் உண்மை.


விராட் கோலி ஒரு சிறந்த பாடகர், நடனமாடுவது மட்டுமின்றி பல்வேறு மேடைகளில் சிறப்பாக பாடியுள்ளார். பிரபல பின்னணி பாடகர், பாடகி கூட இந்தளவு பாடுவார்கள் என்றால் சந்தேகம்தான். அப்படி ஒரு பாடலை பாடியுள்ளார். அப்படியான பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. 






அந்த வீடியோவில், விராட் கோலி 'பணி டா ரங்’ என்ற ஹிந்தி பாடலை மிக அற்புதமாக பாடியுள்ளார். 


ஐபிஎல் 2024 - விராட் கோலி: 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, ஐபிஎல் 2024ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 147.49 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 500 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், அதிகரன்கள் எடுத்தவருக்கான ஆரஞ்சு கேப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 


ஐபிஎல் 2024 சீசன் தொடங்குவதற்கு முன்பு வரை, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற வாய்ப்பு இல்லை என்று கருத்துகளை கிளம்பியது. தன் மீதான அத்தனை கருத்துகளையும் உடைத்து, நான் தான் கிரிக்கெட்டின் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சமீபத்தில், பிசிசிஐ சார்பில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இடம் பிடித்து அசத்தினார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை போட்டி என்று கூறப்படுகிறது. இதன்பிறகு, இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் விளையாடிவிட்டு, இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இருவரும் ஓய்வுபெறலாம்.