புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் 10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  ஜனவரி 19 ஆம் தேதி அதாவது புதன்கிழமை முதல் தொடங்க இருந்த திருப்புதல் தேர்வையும் தமிழக அரசு ஒத்திவைத்தது. தமிழக பாடத்திட்டம் புதுச்சேரி, காரைக்காலில் பின்பற்றப்படுகிறது. அதே நேரத்தில் புதுவையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


VK Sasikala on MGR Birth Anniversary : “மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொண்டு வருவோம்”- சசிகலா உறுதி


என்ன நடக்குது இங்கே... பொங்கல் ரிலீஸ் படங்களை ஓங்கி உதைத்து முதல்நாளே வசூல் சாதனை படைத்த எம்.ஜி.ஆர்.,யின் ‛நினைத்ததை முடிப்பவன்’


10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் புதுவை கல்வித்துறை தயாரிக்கும் வினாத்தாள் அடிப்படையில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தை பின்பற்றி வரும் 19 ஆம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வை புதுச்சேரி அரசின் கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ளார்.


Alanganallur Jallikattu : விடாமல் போராடிய இளைஞர்.. தூக்கியெறிந்த காளை


புதுச்சேரி கொரோனா பாதிப்பு:


புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 907 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 38 ஆயிரத்து 617 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 130 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 8229 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 8359 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 147 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 168 (92.46 சதவீதம்) ஆக உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண