“ஒரு அடார் லவ்” என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை பிரியா வாரியர். இவர், அந்த படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராயா பூவி என்ற பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அந்த பாடல் காட்சியில் ஒரு வரிக்கு இவர் நாயகனைப் பார்த்து கண்ணடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இவர் கண்ணடிக்கும் காட்சி இந்திய அளவில் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகியது.
இதையடுத்து, அவருக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டாகினர். மேலும், அந்த படத்திற்கு பிறகு பல்வேறு படவாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகின்றனர். தொடர்ந்து, ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக நடித்த பிரியா வாரியர் செக் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
Alanganallur Jallikattu Live: குலுங்கும் அலங்கை.. இது உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ABP நாடு நேரலையில் பார்த்து மகிழுங்கள்!
இந்தநிலையில், தற்போது இவர் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி பங்களா என்னும் பெயரில் உருவாகியுள்ள இந்த திரைபடத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், ஸ்ரீதேவியாக நடித்திருக்கும் பிரியா வாரியர் ஓரிரு காட்சிகளில் நிர்வாணமாக நடித்துள்ளாராம்.
பிரியா வாரியருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் ஏராளம். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள இவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் அவரது ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்த சூழலில் தற்போது பிரியா வாரியர் ட்ரான்ஸ்பரண்ட் உடை அணிந்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்