தமிழ்நாட்டில் நாளை முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். அதன் அடிப்படையில் மார்ச் 26ம் தேதி (நாளை) முதல் வருகின்ற ஏப்ரல் 8ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் பிப்ரவரி 29ம் தேதி வரை 1ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடைபெற்றது. இந்தநிலையில், ஏப்ரல் 8ம் தேதி பொதுத்தேர்வுக்குபின் வருகின்ற மே 10ம் தேதி முடிவுகள் வெளியாக இருக்கிறது. 

இந்தநிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் வருகின்ற ஏப்ரல் 8ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!

Continues below advertisement

நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள்"என குறிப்பிட்டிருந்தார்.