திருவள்ளூரில் நீட் தேர்வு


திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேருவதற்கு, நீட் தேர்வு நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து திருவள்ளூர், திருத்தணி ஆகிய பகுதியில்  தலா ஒரு மையத்திலும், ஆவடி, பூந்தமல்லி ஆகிய ஆகிய பகுதில் தலா  4 மையங்களில் என மொத்தம் 10 மையங்களில் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது.


திருவள்ளூரில், 3,872 மாணவர்கள், 2,113 மாணவியர் என, மொத்தம் 5,985 பேர் விண்ணப்பித்திருந்தனர். மதியம், 12:00 - 1:30 மணி வரை மாணவர்களை சோதனை செய்த பின், அவர்களின் அறைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில், 3,872 மாணவர்களில், 3,783 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள, 89 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதேபோல, 2,113 மாணவியரில், 2,055 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள, 58 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தத்தில், 5,985 பேரில், 147 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




 கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற தேர்வு


மாணவர்கள், முழுக்கை சட்டை, இறுக்கமான, எம்பிராய்டரி போட்ட ஆடைகள், குர்தா, பைஜாமா ஆகியவற்றையும், மாணவிகள், ஜீன்ஸ், லெக்கின்ஸ், காதணி, மூக்குத்தி, மொதிரம், நெக்லஸ், பிரேஸ்லெட், கொலுசு ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு கூடத்திற்கு காலணி அணிந்து செல்லவும், அனுமதி இல்லை. மொபைல் போன், கைக்கடிகாரம், பேனா, பென்சில், பவுச் பாக்ஸ், கால்குலேட்டர், பென் டிரைவ், ப்ளூ டூத், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை எடுத்துச்செல்லக்கூடாது,  உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வை எழுத வந்த மாணவி ஒருவருக்கு சோதனை என்ற பெயரில் உள்ளாடை அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




 மனிதாபிமான காவலர்கள்


இந்த நிலையில் நேற்று ஆவடி பகுதியில் நான்கு இடங்களில் நீட் தேர்வு மையத்தில் தேர்வுகள் நடைபெற்றது. ஆவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஆனந்தி, என்பவர் தான் மையம் மாறி வந்து விட்டதாக, நீட் தேர்வு மைய வாசலில் அழுது கொண்டிருந்துள்ளார். நீட் தேர்வு துவங்குவதற்கு சில நிமிடங்களே, இருந்த நிலையில் அந்த மாணவி அழுது கொண்டு செய்வதறியாமல் திகைத்துள்ளார். இதனை கண்ட காவலர்கள் மாணவியிடம், இதுகுறித்து விசாரித்துள்ளனர்.


அப்பொழுது மாணவி தனியார் பள்ளியில் நடைபெறும் நீட் தேர்வு மையத்திற்கு செல்வதற்கு பதிலாக இந்த பகுதிக்கு வழி மாறி வந்ததை உணர்ந்த காவலர்கள் சிறிதும் , தாமதிக்காமல், Avadi Traffic Patrol  வாகனத்தில் ஏற்றி சென்று மாணவி தேர்வு எழுதுவதற்கு ஆவடி போக்குவரத்து காவலர்கள் தலைமை காவலர் தனசேகரன் மற்றும் தினேஷ் குமாரசாமி ஆகியோர் உதவி செய்தனர்.


 






மாணவி கடைசி நிமிடத்தில் காவலர்களின் உதவியால் ஓடிச் செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பதிவு வருகிறது. காவலர்களின் இந்த செயலுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர் . மேலும் தக்க சமயத்தில் உதவி செய்த காவலர்களுக்கு மாணவியின் குடும்பத்தினர் மற்றும் மாணவி ஆனந்தி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்