தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு, செங்கல்பட்டு  மாவட்டத்தில் 10.07.2023 அன்று பள்ளி  மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

தமிழ்நாடு நாள் ( Tamilnadu day 2023 )

செங்கல்பட்டு ( Chengalpattu News ): தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் கடந்த ஆண்டு தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என தெரிவித்து பின்வருமாறு அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

"தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967 ஆம் நாளினை பெருமைப்படுத்திடும்  வகையில் ஆண்டுதோறும்  சூலை 18ஆம் நாள் 

தமிழ்நாடு நாள் என்று பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்".



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கிணங்க 2023-2024ஆம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 10.07.2023 அன்று காலை 09.00 மணியளவில்  செங்கல்பட்டு, சி.எஸ்.ஐ. தூய கொலம்பா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.   

பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரை கடிதம்

இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ / மாணவியர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து, ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். கட்டுரைப் போட்டியில் ஒரு பள்ளி சார்பாக இருவரும், பேச்சுப் போட்டியில் ஒரு பள்ளி சார்பாக இருவரும் கலந்து கொள்ள முடியும்.

போட்டிக்கான தலைப்புகள்

கட்டுரை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்

பேச்சு

தமிழ்த்திரை உலகத்தை புரட்டிப் போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்

பரிசுத்தொகை என்னென்ன ?

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே முதல் பரிசு ரூ.10,000/-,  இரண்டாம் பரிசு ரூ.7000/-,  மூன்றாம் பரிசு ரூ.5000/- என்ற வகையில் பரிசுத்தொகைகள் வழங்கப்பெற உள்ளன. செங்கல்பட்டு  மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளியில் பயிலும் மாணவ/மாணவிகள் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பெறுகிறது.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர