இந்திய கல்லூரி மாணவர்கள், தங்களின் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில், கலந்து உரையாடக்கூடிய (ஊடாடும்) ஆய்வு சாட்டை ChatGPT அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற சாட் ஜிபிடி, "இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கலந்துரையாடும் சாட்" என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது தேர்வுத் தயாரிப்பின் போது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இந்த கேள்விகள் பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெறுவது எப்படி?
மாணவர்கள் தங்கள் வலை உலாவியில் "இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான சாட்கள்" என்று தேடுவதன் மூலம் இந்த சாட்டை பயன்படுத்த முடியும்.
சாட் ஜிபிடி, ஒவ்வொரு மாணவருக்கும் வெவ்வேறு கேள்விகளை பரந்த அளவில் காட்டுகிறது. மாணவர்கள் கேள்விக்குறி, புகைப்படங்கள் மற்றும் எந்த கோப்பையும் பதிவேற்றலாம், இணைப்பு அல்லது ஆவணத்தைப் பதிவேற்றம் செய்து கேள்வியைத் தேடலாம்.
ஓப்பன் ஏஐயின்படி, இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான சாட்டுகள் என்பவை, இந்திய கல்லூரி மாணவர்கள் சாட் ஜிபிடியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான உண்மையை எடுத்துக் காட்டுவதாகவும்.
மாணவர்கள் என்ன பகிர்ந்து கொள்கிறார்கள்?
- சாட் ஜிபிடியைப் படிப்பது, பணிகளை முடிப்பது அல்லது தேர்வுகளுக்குத் தயாராவது போன்ற வழிகள்
- நிரலாக்கம், பயனுள்ள தொடர்பு அல்லது வடிவமைப்பு போன்ற புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது
- திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைத்தல், ரெஸ்யூம் எழுதுதல் அல்லது வேலை வாய்ப்புத் தயாரிப்புகள் போன்ற கல்லூரி வாழ்க்கை மேலாண்மை
ஆகியவற்றை கல்லூரி மாணவர்கள் செயற்கை நுண்ணறிவிடம் கேட்டு, பகிர்ந்து கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
எங்கும் ஏஐ, எதிலும் ஏஐ என்ற நிலையில் அசகாய வேகத்தில் உருவாகி வரும் நிலையில், கற்பித்தலிலும் கணிசமான இடத்தை இந்த ஏஐ பிடித்து வருவது இதன்மூலம் தெரிய வருகிறது.