Gold Rate Today in Chennai (28-10-2025):  இந்தியாவைப் பொறுத்தமட்டில் தங்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இது ஆடம்பர, ஆபரணப் பொருளாக மட்டுமின்றி அவசர காலத்தில் நமக்கு கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாகவும் உள்ளது. 

Continues below advertisement


ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் சரிவு:


இந்த சூழலில், கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டு இருந்தது. சவரன் 1 லட்சம் ரூபாயை நெருங்கியது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை சறுக்கி வருகிறது. இன்று மட்டும் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 3 ஆயிரம் குறைந்துள்ளது. இது மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 


விலை என்ன?


இதனால், தங்கத்தின் விலை ரூபாய் சவரனுக்கு ரூபாய் 88 ஆயிரத்து 600-க்கு விற்கப்பட்டு வருகிறது. கிராம் ரூபாய் 11 ஆயிரத்து 075க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூபாய் 11 ஆயிரத்து 450க்கு விற்கப்பட்டது. இன்று கிராமிற்கு ரூபாய் 375 குறைந்துள்ளது. இதனால், சவரன் ரூபாய் 3 ஆயிரம் குறைந்துள்ளது. 


சவரன் தங்கம் கடந்த 21ம் தேதி ரூபாய் 96 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இன்று சவரனுக்கு ரூபாய் 88 ஆயிரத்து 600க்கு விற்கப்படுகிறது. ஒரு வாரத்தில் தங்கம் 8 ஆயிரம் சவரனுக்கு குறைந்திருப்பது மக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் 21ம் நூற்றாண்டு பிறந்தது முதலே தங்கத்தின் விலை மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. தொழில்நுட்ப வளர்ச்சி, இணைய வளர்ச்சிக்குப் பிறகு வேலைவாய்ப்புகள் அதிகரித்தது, மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்தது. இதனால், தங்கம் வாங்குபவரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது.


6 ஆண்டுகளில் 88 லட்சம் ரூபாய்:


கொரோனாவிற்கு பிறகு பெரும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு வேண்டும் என்பதற்காக தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால், தங்கம் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கியது. இதனால், கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் ஒரு கிலோ தங்கம் ரூபாய் 88 லட்சம் உயர்ந்துள்ளது. உலக நாடுகளிலும் நிலையற்ற பொருளாதார சூழல் நிலவி வருவதாலும் தங்கம் விலை ஏறுமுகம் கண்டு வருகிறது.


இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை சரிந்து வருகிறது. தற்போது சவரன் தங்கம் ரூபாய் 88 ஆயிரத்து 600க்கு விற்கப்பட்டாலும் வரிகளுடன் சேர்த்து ரூபாய் 1 லட்சத்தை ஒரு சவரன் தங்கம் கடந்துவிடும். இதனால், தங்கம் விலை மேலும் குறைந்தால் மட்டுமே மக்களுக்கு நிம்மதி உண்டாகும். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 90 ஆயிரத்திற்கு கீழே குறைந்திருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


மேலும், வெள்ளி விலையும் சத்தமே இல்லாமல் ஏறி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 165க்கு விற்கப்பட்டு வருகிறது.