எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக அரையாண்டு விடுமுறையில் மாற்றத்தை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு தள்ளிப் போயுள்ளது.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வி ஆணையரும் தொடக்கக் கல்வி இயக்குநரும் தெரிவித்துள்ளதாவது:
''2022- 2023ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு வமர பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே வழங்கிய நாட்காட்டியின்படி பள்ளிகளுக்கு 02.01.2023 அன்று, விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எண்ணும் எழுத்தும் திட்டம் சார்பாக 1 முதல் 3ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அளவிலான பயிற்சியை 02.01.2023 முதல் 04.01.2023 வரை நடத்திடுமாறு தெரிவிக்கப்பட்டது. 03.12.2022 அண்று நடைபெற்ற எண்ணும் எழுத்தும் சார்பான ஆய்வுக் கூட்டத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளித் திறக்கும் நாள் எனவும் மற்ற வகுப்புகளுக்கு பன்ளி திறக்கும் நாள் ஜனவரி 2 என்பதையும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.
எனவே 1 முதல் 3ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 02.01.2023 முதல் 04.01.12023 வரை நடைபெறும் எண்ணும் எழுத்தும் சார்பான மூன்றாம் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி தடைபெறும் நாளில் எவ்வித மாற்றமும் இல்லாதால் அனைத்து ஆசிரியர்களும் மேற்கண்ட
நாட்களில் பயிற்சியில் தவறாமல் கலந்து =கொள்ள வேண்டும் எண அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட கல்வி அழுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் 02.01.2023 முதல் பணிக்கு வந்து, மூன்றாம் பருவத்திற்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் மூன்றாம் பருத்திற்குரிய பாடத்திட்டம் தயாரித்தல், கற்றல் உபகரணங்கள் தயாரித்தல் போன்ற பணியில் ஈடுபடலாம். 4 மற்றும் 5ஆம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவேடு அவசியம் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. பள்ளி வளாகம் தூய்மைப் பணியும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் நடுநிலைப் பள்ளி , உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 6 முதல் 12ஆம் வருப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 02.01.2023 முதல் வழக்கம்போல் பள்ளி செயல்படும்''.
இவ்வாறு பள்ளிக் கல்வி ஆணையரும் தொடக்கக் கல்வி இயக்குநரும் தெரிவித்துள்ளனர்.