வாத்தி' திரைப்படத்தின் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பு காரணமாக திரைப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் பலர் ஆர்வம் காட்டினர்; தற்போது தமிழ்நாடு திரையரங்க விநியோகத்தை '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் வாங்கியுள்ளது.


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் 'தளபதி 67' திரைப்படத்தை  லலித் குமாரின் '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' தயாரிக்கவுள்ளது. அதே போல, விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படத்தை சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில இடங்களை தவிர்த்து பிற இடங்களில் வெளியிடுகிறது; 


முன்னதாக, ’வாத்தி திரைப்படமானது  டிசம்பர் 2 ஆம் தேதி படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனம் 5 ஏரியாக்களுக்கு விநியோக உரிமையை பெறுவதற்கு கேட்டுள்ளது. அத்துடன் ஆகஸ்ட் மாத முடிவிலேயே வாத்தி திரைப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் பேசியுள்ளது.


 




அதன்படி விநியோகத்திற்கு ரூ.8 கோடி என ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது. அதற்காக ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனம் ரூ.3 கோடி முன்பணம் கொடுத்துள்ளது.இது குறித்து ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டது. 



அதில்,"வாத்தி திரைப்படம் முதலில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. ஐந்து ஏரியாக்களுக்கு படத்தை வெளியிடுவதற்கு 8 கோடி ரூபாய் ஒப்பந்தம் பேசப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி  ரூ 5 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. தீபாவளிக்கு பின்னர் ஒப்பந்தம் போடலாம் எனத் தயாரிப்பு நிறுவனம் கூறியது.குறிப்பிட்ட தேதியில் ஒப்பந்தமும் போடபடவில்லை படத்தையும் கூறிய தேதியில் வெளியிடவும் இல்லை.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.