தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின்  மத்திய ஜிஎஸ்டி மற்றும் கலால் துறையில் வேலைவாய்ப்பு தொடர்பான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையல் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் தபால் மூலமாக தெரிவிக்கப்படும். வகுப்புவாத பட்டியல் அடிப்படையில் நிரப்பப்படும்.

  


காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை www.centralexcisechennai.gov.in என்ற இணையதளத்தில்  தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 


பணியிடங்கள் விவரம்: 


பணி: Tax Assistant


காலியிடங்கள்: 13


ஊதியம்: மாதம் ரூ.25,500 - 81,100


தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Stenographer Gr-II


காலியிடங்கள்: 02


மாத ஊதியம்: மாதம் ரூ.25,500 - 81,100 


கல்வித் தகுதி: பன்னிரென்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்து எழுதி அதனை 50 நிமிடத்தில் விரிவாக தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


ஆங்கிலத்தில் 50 நிமிடத்திலும், இந்தியில் 65 நிமிடத்திலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.




 


பணி: Havaldar


காலியிடங்கள்: 03


மாத ஊதியம் : ரூ.18,000 - 56,900


கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் 157.5 செ.மீ உயரம், மார்பளவு 81 செ.மீ அகலம், 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 156 செ.மீ உயரம், 48 கிலோ எடை இருக்க வேண்டும். 


பணி: Multi Tasking Staff


காலியிடங்கள்: 01


மாத ஊதியம்:  ரூ.18,000 - 56,900


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 31.12.2021 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.12.2021. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.  முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், நேர்காணல் தேர்வுக்கு வரவழைக்கப்படுவர்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி : The Additional Commissionat-CCA, GST & Central Excise, Tamilnadu & Puducherry Zone, GST Bhavan, Nungampakkam, Chennai. 


மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின்  மத்திய ஜிஎஸ்டி மற்றும் கலால் துறை அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வளைதளத்தை (www.centralexcisechennai.gov.in) அணுகலாம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண