தமிழ்நாட்டின் நிதியை குஜராத், உ.பி.க்கு மடை மாற்றிய மத்திய அரசு; ஏன்? வலுக்கும் கண்டனம்!
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையான புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டிலும் கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டு வந்தால் மட்டுமே நிதியை விடுவிக்க இயலும் என்று தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய பிஎம் ஸ்ரீ நிதியை, குஜராத், உ.பி. ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி இருப்பதற்கு, கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒதுக்கிய நிதி ரூ.2,152 கோடியை உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் அருணன் கூறி உள்ளதாவது:
நிதி கொடுக்க நிபந்தனையா?
’’ஒன்றிய அரசு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்த சுமார் ரூ.2152 கோடியை விடுவிக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிறது. அதாவது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையான புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டிலும் கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டு வந்தால் மட்டுமே நிதியை விடுவிக்க இயலும் என்று தெரிவித்திருக்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாகத்தான் 12 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு ஆசிரியர்கள் என 15 ஆயிரம் ஆசிரியர்களின் ஊதியம், வகுப்பறை கட்டிடங்கள், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், ஆசிரியர்களுக்கான அனைத்து வகைப் பயிற்சிகள் மேற்கொள்ள இந்த நிதியைத்தான் பயன்படுத்துகின்றனர்.
கல்வித் தரத்தைச் சிதைக்கவா?
ஆனால் ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையான புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தினால் மட்டுமே விடுவிக்க இயலும் எனத் தெரிவித்து நிதியை உத்தரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்,து தமிழ்நட்டிற்கு சேர வேண்டிய நிதி ரூ. 2152 கோடியை திருப்பி விட்டுள்ளது, இது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடிவமைத்து செயல்படுத்தி வுரும் திட்டங்களை தடுத்து நிறுத்தி தமிழ்நாட்டு மாணவர்களையும் இளைஞர்களின் கல்வியையும் சீரழித்து தமிழ்நாட்டு கல்வித்தரத்தைச் சிதைக்க ஒன்றிய அரசு ரூ.2,152 கோடியை உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத்திற்கு திருப்பி அனுப்பி வஞ்சனை செய்துள்ளது
மாற்றான் தாய் மனப்பான்மை எண்ணத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய ரூ. 2152 கோடியை உத்தரப் பிரதேச மாநிலத்திற்கும் குஜராத் மாநிலத்திற்கும் மடை மாற்றம் செய்ததை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்’’.
இவ்வாறு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.