Just In




இந்தியாவின் முதல் Brixton Cromwell 1200 பைக்கை சொந்தமாக்கிய மாதவன்
ஆஸ்திரிய நாட்டும் நிறுவனமான பிரிக்ஸ்டன் மோட்டர் சைக்கிள் தங்கள் Brixton Cromwell 1200 ரக பைக்கை நடிகர் மாதவனுக்கு வழங்கியுள்ளது

மாதவன்
தமிழ் , இந்தி என இரு மொழிகளிலும் அங்கீகாரம் பெற்ற நடிகர் மாதவன். ரொமாண்டிக் ஹீரோ , தந்தை , விஞ்ஞானி , குத்து சண்டை பயிற்சியாளர் என தனது கரியரில் தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஒரு நடிப்பு தவிர்த்து மோட்டர் பைக் மீது அதீத ஆர்வம் கொண்டவர் மாதவன். Yamaha V Max Indian Roadmaster , Honda Gold Wing 2022 , Triumph Rocket 3 R: , Ducati Diavel என உயர்ரக மோட்டர் பைக்கள் மாதவனின் கலெக்ஷனில் உள்ளன. அந்த வகையில் தற்போது இந்தியாவின் முதல் Brixton Cromwell 1200 மோட்டர் பைக்கிற்கு சொந்தக்காரர் என்கிற பெருமைக்கு உரியவையாகியுள்ளார்.
மாதவனின் புது Brixton Cromwell 1200
ஆஸ்திரிய நாட்டு மோட்டர் பைக் நிறுவனம் Brixton இதுவரை இந்தியாவில் தங்கள் மோட்டர் பைக் வரிசைகளை விற்பனைக்கு வெளியிட தொடங்கியுள்ளது , Motohaus என்கிற இந்திய நிறுவனத்துடன் சேர்ந்து தங்களது Brixton Cromwell 1200 ரக மோட்டர் பைக்கை கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிட்டது. ரெட்ரோ லுக் மற்றும் நவீன் கட்டமைப்புக்கு பாராட்டப்பட்டும் இந்த மோட்டர் பைக்குகள் இந்தியாவில் பரவலாக விற்பனைக்கு வர இருக்கின்றன.
இந்தியாவின் முதல் Brixton Cromwell 1200 பைக்கை திரைப்பட நடிகர் மாதவனுக்கு வழங்கி விளம்பரப்படுத்தியது பிரிக்ஸ்டன் நிறுவனம். இதன் மூலம் இந்தியாவின் முதல் Brixton Cromwell 1200 மோட்டர் பைக்கிற்கு சொந்தக்காரராக ஆகியுள்ளார் மாதவன். இந்த மொட்டார் சைக்கிளின் விலை 7.7 லட்சம்.
இதுகுறித்து அவர் பேசுகையில் ' இந்த வண்டியை பார்த்ததும் இது ரொம்ப ஸ்பெஷல் என எனக்கு தெரிந்தது. வெறும் ரைட் மட்டுமில்லை இதை ஓட்டும்போது வரும் நாஸ்டால்ஜியா இது கொடுக்கும் தன்னம்பிக்கை எல்லாம் சேர்த்து. ரெட்ரோ லுக் மற்றும் மாடர்ன் கட்டமைப்பு எல்லாம் சேர்ந்து இது எனக்காகவே செய்யப்பட்டது மாதிரி இருக்கு. இந்தியாவில் முதல் Brixton Cromwell 1200 பைக்கின் ஓனராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அதுவும் இதில் என் மகன் வேதாந்தின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது இதை இன்னும் எமோஷனலான ஒன்றாக மாற்றுகிறது.