சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. 


2022ஆம் ஆண்டுக்கான 10, பிளஸ் 2 தேர்வுகள் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்க உள்ளன. பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் 10ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. 


இரண்டு பருவத் தேர்வுகள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பொதுத்தேர்வு நடைபெற முடியாமல் போவதைத் தவிர்க்கும் வகையில், 2021-22ஆம் ஆண்டு பொதுத்தேர்வு இரண்டு பருவங்களாக நடத்தப்பட்டது. நவம்பர், டிசம்பர் மாதம் நடைபெற்ற முதல் பருவத் தேர்வில், கொள்குறி வகை வினாக்களும் இரண்டாம் பருவத் தேர்வில் பகுப்பாய்வு வகை அடிப்படையிலான கேள்விகளும் இடம்பெற்றன.


இந்த நிலையில் ஜூலை 22ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. 12ஆம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி பெற்றனர். சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றனர். 


முதல் பருவம், இரண்டாம் பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு இறுதி மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்பட்டது. உள் மதிப்பீடு மதிப்பெண்கள், திட்டப்பணிகள், நடைமுறைத் தேர்வுகள், பொது தேர்வுக்கு முந்தைய தேர்வு உள்ளிட்ட விவரங்கள் இறுதி மதிப்பெண் சான்றிதழில் இடம்பெற்றது.


ஆகஸ்ட் 23ஆம் தேதி துணைத் தேர்வுகள்


இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான 10, பிளஸ் 2 தேர்வுகள் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்க உள்ளன. பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் 10ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. 


இரண்டாவது பருவத் தேர்வு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வுகள் நாடு முழுவதும் ஆஃப்லைன் முறையில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற உள்ளன.  


குறிப்பாக கட்டாய முகக்கவசம், சானிடைசர்களைப் பயன்படுத்துவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும்.


10ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை: https://www.cbse.gov.in/cbsenew/documents//COMPTT_DATESHEET_CLASS10_2022_04082022.pdf


12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை:


https://www.cbse.gov.in/cbsenew/documents//COMPTT_DATESHEET_CLASS12_2022_04082022.pdf


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.