ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலக சிங்க தினம் கொண்டாடப்படுகிறது. காட்டுக்கே ராஜா என கொண்டாடப்படும் சிங்கங்கள் தற்போது அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் இடம்பிடிக்க துவங்கியுள்ளன. ஆனால் அது வெளி உலகிற்கு அப்பட்டமாக தெரியவில்லை. சிங்கங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ,  அவற்றின் பாதுகாப்பை நோக்கி செயல்பட வேண்டிய அவசரத் தேவையையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.




அழிந்து வரும் சிங்கங்கள் :


சுமார் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சிங்கங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் இன்றோ நிலை அப்படியாக இல்லை. சுற்றுச்சூழல் மாற்றங்களின் காரணமாக சிங்கங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு  உலகில் இருந்த சிங்களின் எண்ணிக்கை 95 சதவிதகிதம் குறைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எனவே அவைகளை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதனை வலியுறுத்தும் நாள்தான் சிங்க தினம்.






வரலாறு மற்றும் நோக்கம் :


பிக் கேட் மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனத்தைச் சேர்ந்த டெரெக் மற்றும் பெவர்லி ஜோபர்ட் ஆகியோரது கூட்டு முயற்சிதான் இந்த தினம் உருவாக காரணம். . சிங்கங்களை அவற்றின் இயற்கையான சூழலில் பாதுகாப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) அச்சுறுத்தும் உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் சிங்கங்கள் இடம்பிடித்திருக்கின்றன. NewsOnAIR படி, உலகில் தற்போது 30,000 முதல் 100,000 சிங்கங்கள் உள்ளன. சிங்கங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பது, அவற்றின் இயற்கையான வாழ்விடங்களைப் பாதுகாப்பது மற்றும் இந்த வகையான வாழ்விடங்களை உருவாக்குவது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.







இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை:


உலக அளவில் ஒப்பிடும் பொழுது  ஆப்பிரிக்காவை தவிர சிங்கங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இந்தியாவில் சிங்கங்கள் இயற்கையாகவே குடியேறியுள்ளன என்கிறது ஆய்வு. குஜராத்தின் கிர் காடுகளிலும், பெரிய சௌராஷ்டிரா பாதுகாக்கப்பட்ட பகுதியிலும் நீண்ட காலமாகே சரிவை சந்தித்த  சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக  ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2015 மற்றும் 2020 க்கு இடைப்பட்ட காலத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை 523 இலிருந்து 674 ஆக அதிகரித்துள்ளது