பி.இ., பி.டெக். பகுதிநேரப் படிப்புகளுக்கும் எம்.எஸ்சி படிப்புகளுக்கும் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மே 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


பி.இ., பி.டெக். பகுதிநேரப் படிப்புகள் 4 ஆண்டுகளுக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. 5 கல்லூரிகளில் மட்டுமே இந்தப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. கிண்டி பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. கிண்டி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் தோல் தொழில்நுட்பப் படிப்புகள் கற்பிக்கப்படுகிறது. 


குரோம்பேட்டை, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும்,  திருச்சி (BIT Campus), பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன. பண்ருட்டி, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கற்பிக்கப்படுகிறது. 


விண்ணப்பக் கட்டணம், தகுதி, சான்றிதழ்கள் உள்ளிட்ட தகவல்களுடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வது குறித்து முழுமையாக அறிந்துகொள்ள https://cfa.annauniv.edu/cfa/pdf/M.SC2_INSTRUCTIONS_2023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


தேர்வர்கள் https://admissions.annauniv.edu/msc022023/login.php என்ற இணைப்பு மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


எம்எஸ்சி படிப்புகள்


மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும்  கிண்டி பொறியியல் கல்லூரியில் எம்எஸ்சி படிக்க நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வு ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.


கூடுதல் தகவல்களுக்கு - 044 2235 8314,   044 2235 8276


கூடுதல் விவரங்களுக்கு: http://www.cfa.annauniv.edu/cfa


முழு நேரப் படிப்புகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்


தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு, அரசு உதவி பெறும்‌ பொறியியல்‌ கல்லூரிகள்‌,அண்ணா பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அதன்‌ உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு நடைபெறத் தொடங்கி உள்ளது. முதலாம் ஆண்டு பி.இ./ பி.டெக். / பி.ஆர்க். பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 


குறிப்பாக மே 5ஆம் தேதி முதல் மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர்.


இந்த மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ஜூன் 12 முதல் 30ஆம் தேதி வரை டிஎஃப்சி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இந்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. குறைதீர்ப்பு முகாம்கள் ஜூலை 13 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.  


பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 5ஆம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வுக்குப் பிறகு, பொதுப் பிரிவினருக்கு 7ஆம் தேதி தொடங்குகிறது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இந்தக் கலந்தாய்வு செப்டம்பர் 24 வரை நடைபெற உள்ளது.