கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி




அரவக்குறிச்சி அருகே பைனான்ஸ் அதிபர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 49 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் மாவட்டம், ஈசநத்தம் விஐபி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (64). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண்கள்  திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.




இவருடைய மனைவி உடல்நிலை சரியில்லாமல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 7 மாதமாக சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி ராஜேந்திரன் வீட்டை பூட்டிவிட்டு பைனான்ஸ் வேலையாக தூத்துக்குடி சென்றுள்ளார். வேலை முடித்துவிட்டு ஈசநத்தம் திரும்பிய ராஜேந்திரன் பூட்டிய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் துணிகள் கலைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.




பீரோவில் வைக்கப்பட்டிருந்த 49 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதை அறிந்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆதாரங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கிய வாலிபர் கைது.


கரூர் கோவை சாலையில் காட்டும் முன்னூர் அருகே விபத்தில் சிக்கிய டெம்போ வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கிய வாலிபரை கரூர் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து, ஒரு டெம்போ ட்ராவலர் வேனில்  கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர். வேனை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த வேன் காலை கரூர் மாவட்டம், கோவை சாலை காட்டுமுன்னூர்அருகே சென்றபோது முன்னாள் சென்ற லாரியை முந்தி டெம்போ வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கிய வாலிபரை கரூர் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து, ஒரு டெம்போ ட்ராவலர் வேனில் ஏராளமானூர் கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர்.  வேனை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த  வேனை காலை கரூர் மாவட்டம் கோவை சாலை காட்டு முன்னூர் அருகே, சென்றபோது முன்னாள் சென்ற லாரியை முந்த முயலும் போது எதிரே மற்றொரு வாகனம்  வந்ததால் விபத்தை தவிர்க்கும் வகையில் வேனை ஓட்டிச் சென்ற முருகன் திடீரென வேனை  வலது பக்கம் வளைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வேன் லாரியின் பின்பக்கம் மோதியது. இந்த விபத்தில் வேனை  ஓட்டிச் சென்ற டிரைவர் முருகன் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். இது குறித்து கரூர் தீயணைப்புத் துறையினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி இடுப்பாடுகளுக்குள் சிக்கிக்கொண்டிருந்தவேன் டிரைவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், காலை கரூர்  கோவை சாலை காட்டு  முன்னூர் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.