தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொல்லியல் நிறுவனத்தில் இடம் பெற்றிருக்கும் இரண்டாண்டு கால அளவிலான தொல்லியல் முதுகலை பட்டப்படிப்பு 2024-2026 மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


2024-2026-ம் கல்வி ஆண்டிற்கான ஈராண்டு கால முழுநேர முதுநிலைப் பட்டயப் படிப்பு (Post Graduate Diploma in Archaeology - PGDA)  அரசு தொல்லியல்‌ மற்றும்‌ அருங்காட்சியகவியல்‌ நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. 


முதுகலைப் பட்டயப் படிப்புகளில் விவரம்:



  • தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு

  • கல்வெட்டியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு

  • மரபு மேலாண்மை மற்றும் அருங்காடியகவியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு 


கல்வித் தகுதி:



  • தொல்லியல்‌ முதுநிலைப்‌ பட்டயப்‌ படிப்பு - 20: ஏதேனும்‌ ஒரு பாடப் பிரிவில்‌ முதுநிலைப் பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்.

  • கல்வெட்டியல்‌ முதுநிலைப் பட்டயப்‌ படிப்பு - 10: தமிழ்‌ / இந்திய வரலாறு / வரலாறு / பண்டைய  வரலாறு மற்றும்‌ தொல்லியல்‌ / வரலாறு மற்றும்‌ தொல்லியல்‌ ஆகிய பாடப் பிரிவுகளில்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ முதுநிலைப் பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும். 

  • மரபு மேலாண்மை மற்றும்‌ அருங்காட்சியகவியல்‌ முதுநிலைப்‌ பட்டயப்‌ படிப்பு 10: இளங்கலை கட்டடப்‌ பொறியியல்‌ அல்லது மானுடவியல்‌ / சமூகவியல்‌ / வேதியியல்‌ / இயற்பியல்‌ /  உயிரியல்‌ / நிலவியல்‌ ஆகிய பாடப் பிரிவுகளில்‌  ஏதேனும்‌ ஒன்றில்‌ முதுநிலைப் பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும். 


தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழியில் கற்பிக்கப்படும். 


பயிலுதவித் தொகை:


ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும் ரூ.6,000/- வழங்கப்படும். 


தேர்ந்தெடுக்கும் முறை:


தமிழ்,‌ இலக்கியம், வரலாறு, தொல்லியல்‌, அண்மைக்கால தொல்லியல்‌ அழகாய்வுகள், கல்வெட்டியல்‌, கட்டடக் கலை, சிற்பக் கலை, நாணயவியல்‌, அருங்காட்சியகவியல்‌, வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பாடங்களில் இருந்த்100 பல் கொள்குறி வினாக்கள்கொண்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்  தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.


எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 21.07.2024


எழுத்துத் தேர்வு மையங்கள்:



  • சென்னை

  • விழுப்புரம்

  • சேலம்

  • திருச்சிராப்பள்ளி

  • மதுரை 


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் தொல்லியல் துறையின் www.tnarch.gov.in என்ற வலைதளத்தின்‌ மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கல்வி சான்றிதழ்கள்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌  ‌ ஆகியவற்றின்‌ நகல்களுடன்‌ இணைத்து சென்னை  முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:


 முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர், தொல்லியல்‌ துறை, தமிழ்‌ வளர்ச்சி வளாகம்‌, 
தமிழ்ச்‌ சாலை, எழும்பூர்,
சென்னை - 600 008 


தொலைபேசி எண் - 044 - 2819 0023


மின்னஞல் முகவரி - tniam2426@gmail.com


விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.07.2024 மாலை 5 மணி வரை 


விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய https://www.tnarch.gov.in/sites/default/files/Application%20form%20-%202024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


https://www.tnarch.gov.in/ta - என்ற இணைப்பை க்ளிக் செய்து கூடுதல் விவரங்களை காணலாம்.