அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழிக் கல்வி உள்ளிட்ட சில பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விவகாரத்தில் துணை வேந்தர் செய்தது தவறு என்றும் அது அரசுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவு என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் இயந்திரவியல் மற்றும் கட்டிடவியல் பாடப்பிரிவுகள் மூடப்படுவது குறித்து, உயர் கல்வித்துறை செயலாளருக்கோ, அமைச்சராகிய எனக்கோ எதையும் தெரிவிக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர், எங்களுக்கு தெரிவிக்காமல்,
இதை  அறிவித்துள்ளார்.

துணை வேந்தர் இது போன்று செய்தது தவறு. அரசுக்கு தெரியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கே இதுகுறித்துத் தெரியவில்லை. இந்த அறிவிப்பு மிகவும் மோசமானது என்று கூறினோம். இந்த தவறை உணர்ந்து தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடனே அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

துணை வேந்தர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். அவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் இது போன்று நடக்கிறது.

மாநில மொழியிலே, தமிழ் மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதுதான் முதல்வர் நோக்கம். தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் முதல்வர் வலியுறுத்தி வருகிறார். மாணவர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. தமிழ் வழிக் கல்வியே முக்கியம். கலைஞர் கருணாநிதி ஆட்சியில்தான் பொறியியல் படிப்புகளில் தமிழ் வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது.

துணை வேந்தர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். அவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் இது போன்று நடக்கிறது.

மாணவர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல

மாநில மொழியிலே, தமிழ் மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதுதான் முதல்வர் நோக்கம். தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் முதல்வர் வலியுறுத்தி வருகிறார். மாணவர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. தமிழ் வழிக் கல்வியே முக்கியம். கலைஞர் கருணாநிதி ஆட்சியில்தான் பொறியியல் படிப்புகளில் தமிழ் வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. 

இயந்திரவியல் மற்றும் கட்டிடவியல் பாடப்பிரிவுகள் மட்டுமின்றி, பிற பாடங்களிலும் தமிழ்வழிக் கல்வி அறிமுகம் செய்யப்படும். 

அனுமதி பெற்ற பிறகே பாடப்பிரிவு சேர்க்கை, நீக்கம்

அதிமுக ஆட்சியில் சூரப்பாவிடம் எடப்பாடி பழனிசாமி பட்ட பாடு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோல இல்லாமல், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் சொல்லி, அவர் திரும்பப் பெற்றுள்ளார். எல்லாத் துணைவேந்தர்களையும் அழைத்துப் பேச உள்ளோம். இனி வரும் காலத்தில் புதிய பாடப்பிரிவு சேர்ப்பு, நீக்கம் குறித்து, உயர் கல்வித்துறை செயலாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது''. 

இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.