கோயம்புத்தூரைச் சேர்ந்த அமிர்த வித்யாலயம், அமிர்த் வித்யாலயம் உலக சாதனை திருவிழா 2025-ஐ நடத்தியது. இதன்மூலம் கல்வித் துறையில் 25 ஆண்டுகளாக இருப்பதைக் கொண்டாடுவதாக, அமிர்த வித்யாலயா தெரிவித்துள்ளது.

உலக சாதனை திருவிழா

ஏற்கெனவே இதற்காக, இந்தியாவின் 3 நாடுகள் மற்றும் 7 வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 27 நடுவர்களின் மேற்பார்வையின் கீழ், எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஆசிய ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட மதிப்புமிக்க சாதனை அமைப்புகளிடமிருந்து அமிர்த வித்யாலயம் அங்கீகாரத்தைப் பெற்றது.

அமிர்த வித்யாலயாவின் மேலாளர் சுவாமினி முக்தாமிர்த பிராணா, மனதை அடக்குவதே உண்மையான கல்வி என்ற தத்துவத்தை எடுத்துரைத்தார். ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் படைப்பாற்றல், புத்திசாலித்தனம் மற்றும் குணநலனை வளர்க்கும் கல்வியை அளிக்க பள்ளி முயற்சிக்கிறது என்று தெரிவித்தார்.

1,28,262 ஓரிகாமி இதயங்கள்

அதேபோல, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அமிர்த வித்யாலயாவின் தாளாளர் சுவாமினி பக்தி ப்ரியம்மிருத பிராணா கூறும்போது, "ஸ்ரீ மாதா அமிர்தானந்த மயி தேவி" உருவத்தை, ஓரிகாமி இதயங்களால் மிகப்பெரிய உருவப்படமாகச் செய்து சாதனை படைத்ததாக தெரிவித்தார். இந்தப் படைப்பை உருவாக்க மொத்தம் 2,598 மாணவர்கள், 150 ஆசிரியர்கள் மற்றும் 100 ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் உழைத்தனர்.

இந்த உருவத்தை உருவாக்க 5 மணி நேரம் 5 நிமிடங்கள் ஆனது. 128,262 ஓரிகாமி இதயங்களைப் பயன்படுத்தி அமிர்தானந்த மயி உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உருவப்படம் 639.84 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.