100 ஆதி திராவிடர் இளைஞர்களுக்கு வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் இதற்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கி மற்றும் காப்பீட்டுத்துறை:
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’2022 -2023 ஆம் ஆண்டிற்கான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் புதிய அறிவிப்புகளில் தற்போதைய வேலைவாய்ப்புச் சந்தையில் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் கிடைக்கும் வாய்ப்புகளை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தாட்கோ மூலம் தேர்வு செய்யப்படும் 100 ஆதி திராவிடர் இளைஞர்களுக்கு நிதி மேலாண்மை (Financial Management), காப்பீடு (Insurance) மற்றும் வங்கிச் சேவை போன்ற நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்காணும் பயிற்சி பெற விரும்பும் பட்டப் படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் http://tahdco.com/ என்ற இணையதளத்தில் சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், கடைசியாக நடைபெற்ற செமஸ்டர் தேர்வு மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், போன்ற ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகலாம்.
தொலைபேசி எண். 044-25246344
கைபேசி எண். 9445029456
இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.
*
போட்டித் தேர்வுக்கு, கட்டணமில்லா நேரடிப் பயிற்சி
அதேபோல சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள மற்றோர் அறிவிப்பில், மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள (போட்டித் தேர்வுக்கு, கட்டணமில்லா நேரடிப் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ’’கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள SSC (CHSL) -2022 போட்டித்தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் 19.12.2022 (திங்கள் கிழமை) அன்று முற்பகல் 10:30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பிற்கு சேர, மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள SSC (CHSL) -2022 தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்கவுள்ள தகுதியுள்ள போட்டியாளர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், விண்ணப்பப்படிவ நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் மேற்குறிப்பிட்ட நாளில் சென்னை- 32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்துகொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு, அலுவலக தொலைபேசி எண்கள் 9499966026, 8870976654 மற்றும் 044-22500835, 9499966023 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம்’’.
இந்தத் தகவலையும் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.