2023 - 2024ஆம் கல்வியாண்டுக்கான எம்.டி. யோகா & இயற்கை மருத்துவம் ஆகிய மருத்துவப் பட்ட மேற்படிப்புகளை மேற்கொள்ளலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 


சென்னை, அரசினர்‌ யோகா & இயற்கை மருத்துவக்‌ கல்லூரி & மருத்துமனையில்‌ மற்றும்‌ செங்கல்பட்டு, சர்வதேச யோகா & இயற்கை மருத்துவம்‌ அறிவியல்‌ நிறுவனத்தில்‌ 2023- 2024ஆம்‌ கல்வியாண்டிற்கான மூன்றாண்டு எம்‌.டி. (யோகா & இயற்கை மருத்துவம்‌) பட்ட மேற்படிப்பிற்கென மொத்தமுள்ள 45 இருக்கைகளுக்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. 


விண்ணப்பங்கள்‌ இவ்வாணையரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்படமாட்டாது. மேலும்‌, அடிப்படைத்தகுதி, நுழைவுத்தேர்வு கால அட்டவணை, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும்‌ பிற விவரங்களுக்கு "https://tnhealth.tn.gov.in/" என்ற வலைதள முகவரியில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.


* விண்ணப்பப்படிவம்‌ மற்றும்‌ தகவல்‌ தொகுப்பினை "https://tnhealth.tn.gov.in/" என்ற சுகாதாரத்‌ துறையின்‌ வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


* விண்ணப்பப் படிவம்‌ மற்றும்‌ தகவல்‌ தொகுப்பினை 17.11.2023 பிற்பகல்‌ 05.00 மணி வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்‌ படிவங்கள்‌ வந்து சேர வேண்டிய கடைசி நாள்‌: 17.11.2023 மாலை 05.30 மணி வரை.


* விண்ணப்பப்படிவம்‌ மற்றும்‌ தகவல்‌ தொகுப்பினை பதிவிறக்கம்‌ செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப் படிவத்துடன்‌ கூடிய விண்ணப்பப்‌ படிவத்தோடு கேட்கப்பட்டுள்ள அனைத்துச்‌ சான்றிதழ்களின்‌ சுய சான்றொப்பம்‌ இடப்பட்ட நகல்களையும்‌ இணைத்து அனுப்ப வேண்டிய முகவரி:


செயலர்‌, தேர்வுக்குழு,


இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதி ஆணையரகம்‌,
அறிஞர்‌ அண்ணா அரசு மருத்துவமனை வளாகம்‌,
அரும்பாக்கம்‌, சென்னை - 600106"


* 17.11.2023 மாலை 05.30 மணிக்குள்‌ தபால்‌ அல்லது கூரியர்‌ சேவையின்‌ மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்‌. அஞ்சல்‌ துறையினரால்‌ மற்றும்‌ கூரியர்‌ நிறுவனத்தால்‌ எற்படும்‌ காலதாமதம்‌ எக்காரணம்‌ கொண்டும்‌ எற்றுக்கொள்ளப்படமாட் டாது.


* விண்ணப்பப் படிவம்‌ மற்றும்‌ ததவல்‌ தொகுப்பிற்கான கட்டணம்‌: ரூ.3000/-


 இக்கட்டணத்தை எஸ்‌.பி.ஐ. இ-சேவை எனும்‌ இணையதள சேவையின்‌ வாயிலாக செலுத்தி அதற்குரிய பணப் பரிமாற்ற குறியீட்டு எண்ணினை அதற்குரிய ரசீதினையும்‌ பதிவிறக்கம்‌ செய்து பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன்‌ இணைத்து சமர்ப்பிப்ப தன்‌ மூலமாக உரிய விண்ணப்பக் கட்டணத்தினை செலுத்தியதாக கருதப்படும்‌.


* அஞ்சல்‌ துறையினரால்‌ மற்றும்‌ கூரியர்‌ நிறுவனத்தால்‌ ஏற்படும்‌ காலதாமதம்‌ எக்காரணம்‌ கொண்டும்‌ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.


* மேலும்‌ விவரங்களுக்கு, இணையதள முகவரி: https://tnhealth.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.


இவ்வாறு இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதித் துறை ஆணையர்‌ தெரிவித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாம்: Coimbatore Ragging: கல்லூரியில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் - கல்லூரி முதல்வர்களுக்குப் பறந்த உத்தரவுகள்