நாள்: 17.09.2022


நல்ல நேரம் :


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை



கௌரி நல்ல நேரம் :


மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை


மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை


இராகு :


காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை :


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


சூலம் – கிழக்கு




மேஷம்


உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கையின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பதற்றமில்லாத பேச்சுக்கள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். கண்கள் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வெற்றி நிறைந்த நாள்.



ரிஷபம்


உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. நன்மை நிறைந்த நாள்.



மிதுனம்


ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாக்குறுதிகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். அமைதி நிறைந்த நாள்.



கடகம்


வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். சங்கீதம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவு மேம்படும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான வாய்ப்புகள் ஏற்படும். சோர்வு நிறைந்த நாள்.



சிம்மம்
செய்கின்ற தொழிலில் மேன்மையும், முன்னேற்றமும் உண்டாகும். உத்தியோக பணிகளில் ரகசியமான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய வீடு மற்றும் மனைகளை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்குண்டான பணிகளை மேற்கொள்வீர்கள். விருத்தி நிறைந்த நாள்.



கன்னி


வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விவசாய பணிகளில்  இருந்துவந்த தடைகள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளை முன்னின்று நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.



துலாம்


வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உடன்பிறந்தவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். தடைகள் நிறைந்த நாள்.



விருச்சிகம்


உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். புதிய முதலீடுகள் சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். செல்வாக்கு நிறைந்த நாள்.



தனுசு


எதிர்காலம் நிமிர்த்தமான சில முக்கிய முடிவினை எடுப்பீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். வாகனத்தை சீர் செய்வதற்கான சூழல் அமையும். யோகம் நிறைந்த நாள்.



மகரம்


மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகள் எண்ணிய விதத்தில் நிறைவுபெறும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். இன்பம் நிறைந்த நாள்.


கும்பம்


உறவினர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். புதிய வேலை நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வழக்கு சார்ந்த பணிகளில் திருப்பம் உண்டாகும். புதிய அணுகுமுறையின் மூலம் எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



மீனம்


சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.