தனியார் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு: நாளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், நாளை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Continues below advertisement

தனியார் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், நாளை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Continues below advertisement

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்வது நீட் தேர்வால் பாதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், முந்தைய அதிமுக அரசு சார்பில் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில், இந்த வழக்குகளின்  விசாரணை நடைபெற்று வந்தது.இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தும்போது, 31 சதவீத பொதுப் பிரிவினருக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இந்த இட ஒதுக்கீடு உள்ளதாக மத்திய அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது என்று வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு வாதிட்டார். இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் அதிகம் ஆகாமல் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால், தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்ததால் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது என்றும், சமூக கட்டமைப்பில் உள்ள சமமற்ற நிலையை அகற்றவே இச்சட்டம் இயற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கட்டமைப்பு சமநிலையற்ற நிலையை கருதிதான் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்றும் விளக்கினார்.

இதற்கிடையே தலைமை நீதிபதி அமர்வில் இறுதிகட்ட விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், வழக்கின் தீர்வு நாளை அளிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola