விழுப்புரம் மாவட்டத்தில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின்கீழ் 41,923 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். விழுப்புரம், சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், எண்ணும், எழுத்தும் திட்டத்தின் வட்டார அளவிலான பயிற்றுநர்களுக்கு நடைபெறும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று (20.12.2022) பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.


மாவட்ட ஆட்சியர் மோகன் கூறுகையில்....


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்பதே ஆகும். மாணவர்களுக்கு வாய்மொழியாக சொல்லித்தரும் கல்வியினை விட செயல்விளக்கத்தின் மூலம் கல்வி கற்பிக்கப்படும்பொழுது கற்றல் திறன் மேம்படும். ஆகையால் இத்திட்டம் துவக்கப்பள்ளி நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


தொடக்க வகுப்புகளில் குறிப்பாக 1 முதல் 3-ஆம் வகுப்புக் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்திடும் நோக்கில், எண்ணும், எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், முதல் மற்றும் இரண்டாம் பருவங்கள் முடிந்த நிலையில், ஜனவரி 2023-ஆம் ஆண்டு முதல் மூன்றாம் பருவம் தொடங்குவதை முன்னிட்டு, வட்டாரத்திற்கு 10 பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு 130 பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 19.12.2022 அன்று கணக்குப்பாடமும், 20.12.2022 இன்று தமிழ் பாடமும் மற்றும் 21.12.2022 அன்று ஆங்கிலப் பாடத்திற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வட்டார அளவில் உள்ள ஆசிரியர்களுக்கு ஜனவரி 2,3 மற்றும் 4-ஆம் தேதிகளில் பயிற்சி வழங்கவுள்ளனர்.


இதன் மூலம், 1052 அரசுப்பள்ளிகள், 189 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 1,241 பள்ளிகளைச் சேர்ந்த 1,770 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம், 41,923 பள்ளி குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஆரம்பப்பள்ளி படிக்கும் பொழுது அவருடைய ஆசிரியர்கள் பறவையினை உதாரணமாக வைத்தும், செயல் விளக்கத்தின் மூலம் வைத்து காட்டியதன் காரணமாக அதன்மூலம் ஈர்க்கப்பட்டு பிற்காலத்தில் விமான பொறியியல் கல்வி பயின்றதாகவும், அதன் மூலமாகவே தனது பணி அமைந்ததாகவும், பல்வேறு நிகழ்வுகளில் தெரிவித்துள்ளார்.


பள்ளிக்குழந்தைகள் பிற்காலத்தில் பல்வேறு துறைகளில் சாதிக்க தூண்டும் வகையில் மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியினை ஆசிரியர்கள் வழங்கிட வேண்டும். எனவே, சமூகம் சார்ந்த முன்னேற்றத்திற்கு ஆரம்பப்பள்ளிக் கல்வி மிகவும் இன்றியமையததாகும், தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் பல்வேறு போட்டித்தேர்வுகளை சந்திக்க வேண்டி நிலை உள்ளது. எனவே, மாணவர்களின் தன்னம்பிக்கையினை அதிகரிக்கும் வகையில் கல்வி பயிற்றுவிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் சிறப்பான முறையில் அமைய மிகுந்த கனிவுடனும், பொறுப்புடனும் அனைவரும் இணைந்து கல்வி கற்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.




உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?


என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.