மருத்துவ முதுநிலை படிப்புக்கான அகில இந்திய நீட் PG 2021 ஆண்டு தேர்வுக்கான அட்மிட் கார்டை தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டது. நீட் PG 2021 தேர்வு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும். நீட் (PG) என்பது எம்.டி / எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளோமா படிப்புகளுக்கான ஒற்றைத்தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாகும். 


தேர்வு எழுதுவோர் தங்கள் அனுமதி அட்டையைப் பதிவிறக்கம் செய்து அச்சுப்பிரதியை எடுத்துவைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அச்சுப்படியைத் தேர்வெழுதுவதற்காகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வரும்போது கொண்டுவந்து காட்டவேண்டும். natboard.edu.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து அட்மிட் கார்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


அட்மிட் கார்டுடன் இ- பாஸ்  அனுமதிச் சீட்டையும் தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் தேர்வு எழுதுவோர் இ- பாஸ் மூலம் பயணிக்க  முடியும். மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


கைபேசி (அணைக்கப்பட்ட நிலையிலும்), பேஜர் அல்லது வேறெந்த மின்னணுச் சாதனமும் அல்லது பென்டிரைவ், திறன் கடிகாரங்கள் போன்றவை அல்லது வேறெந்த இது போன்ற தொடர்புச்சாதனங்களும் கால்குலேட்டர்களும் செயல்படும் நிலையில் அல்லது அணைத்துவைக்கப்பட்ட நிலையிலும் கூட தேர்வறையில் அனுமதிக்கப்படமாட்டாது. கடைசிநேர நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக மின்னணு அனுமதி அட்டையின் அச்சுப்பிரதியை முன்கூட்டியே எடுத்துவைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.