+2 Revaluation: தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது:


12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. அதனை தொடர்ந்து மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பத்தவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை www.gde.tn.gov.in   என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். 12ம் வகுப்பு துணத்தேர்வுக்கு விண்ணப்பத்தவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:


மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதைதொடர்ந்து கடந்த மே மாதம் 6ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. அதன்படி,  12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக இருந்தது. அதாவது மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்று இருந்தனர். 


மறுகூட்டல் விண்ணப்பம்:


எண்ணிகையில் தமிழ்நாட்டில் மாணவியர்கள் 3,93,890 (96.44%) பேரும்,  மாணவர்கள் 3,25,305 (92.37%) பேரும் தேர்ச்சி அடைந்தனர். தோல்வியடைந்தவர்களில் தாங்கள் தேர்ச்சி பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது என கருதியவர்கள் மறுமதிப்பீட்டிற்கும், தங்களுக்கு கூடுதல் மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது என கருதியவர்கள் மறுகூட்டலுக்கும் விண்ணபிக்க உடனடியாக அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது.


+2 துணை தேர்வு: 


ஜுன்/ஜுலையில் நடைபெற உள்ள துணை தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகளை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்‌ சென்று "HALL TICKET" என்ற வாசகத்தினை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்‌ தோன்றும்‌ "HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNE/ JULY 2024 - HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தரப்‌ பதிவெண்‌ (Permanent Register No.) மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ (Date of Birth‌) பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. செய்முறைத்‌ தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத்‌ தனித்தேர்வர்கள்‌ தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின்‌ முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்‌.