12th Public Exam: தமிழ்நாடு முழுவதும் இன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 

Continues below advertisement

12ம் வகுப்பு பொதுத்தேர்வு:

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் பொதுத்தேர்வுகள் நடந்தது. இன்று தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவியர்கள் எழுதுவதற்கு பதிவு செய்திருந்தனர். இவர்களில் தனித்தேர்வர்களும் அடங்கும்.

Continues below advertisement

11 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்:

12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் பாடமாக மொழித் தேர்வு நடந்தது. இவர்களில் 11 ஆயிரத்து 430 மாணவர்கள் இன்று மொழிப்பாடத் தேர்வை எழுதவில்லை. கல்வித்துறை வெளியிட்ட இந்த தகவலால் கல்வியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  எதற்காக மொழிப்பாடத்தை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்றும் ஆராய உள்ளனர். 

இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு கல்வி வளர்ச்சி மிகுந்த மாநிலம் ஆகும். இங்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவில்லை என்பது கல்வியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துதொடர்பாக விசாரணை நடத்த விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்றைய தேர்வை எழுதாத நிலையில், அடுத்தடுத்த தேர்வுகளும் எத்தனை மாணவர்கள் எழுதவில்லை என்பதையும் கண்காணிக்கவும், மாணவர்கள் தேர்வுகள் எழுதாமல் இருப்பதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இ

தீவிர கண்காணிப்பு:

இன்று தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வை  3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும் எழுதுவதற்கு பதிவு செய்திருந்தனர். சிறைவாசிகள் 145 பேரும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

12ம் வகுப்பு பொதுத்தேர்விற்காக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் 43 ஆயிரத்து 446 ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பொதுத்தேர்வை கண்காணிக்க 4 ஆயிரத்து 470 பறக்கும் படைகளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.