ஆசை ஆசையாய் வளர்த்த செல்லப்பிராணி உயிரிழப்பு! மீண்டும் உயிர் பெறாததால் பெண் எடுத்த விபரீத முடிவு

உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூஜா. வயது 32. இவர் தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

Continues below advertisement

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது செல்லப் பூனையின் இழப்பைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூஜா. வயது 32. இவர் தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

இதையடுத்து அவர் தனது பெற்றோர் வீட்டில் தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.  இதையடுத்து அவர் ஆசை ஆசையாய் பூனைக்குட்டி ஒன்று வாங்கியுள்ளார். அதிக நேரம் அந்த பூனைக்குட்டியோடு நேரத்தை செலவிட்டு தனது விரக்தியை கழித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த பூனை கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி திடீரென உயிரிழந்தது. இதனால் பூஜா தாங்க முடியாத அதிர்ச்சிக்கு உள்ளானார்.  

ஆனாலும் தன்னுடைய பூனை மீண்டும் உயிர் பெறும் என்ற நம்பிக்கையில் அவர் அந்த பூனையின் உடலை அடக்கம் செய்ய முன் வரவில்லை. இதையடுத்து அந்த பூனையின் உடலை தன் அருகிலேயே வைத்து பராமரித்தார்.

நாட்கள் செல்ல செல்ல அவருக்கு நம்பிக்கை குறைய தொடங்கியது. இதனால் அவர் ஒரு விபரீத முடிவை எடுக்க முற்பட்டார். அதன்படி, அவர் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்தார்.

தனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த நேரத்தில் பூனையாவது உடன் இருக்கும் என நம்பிய பூஜாவுக்கு அதன் இழப்பு தாங்கிக்கொள்ள முடியாத வேதனையை அளித்துள்ளது.

இதையடுத்து அவர் தனது வீட்டின் மாடியின் ரூமை உள்தாழ்பாள் போட்டுக்கொண்டு உறங்க சென்றுள்ளார். துக்கத்தில் இருக்கும் தனது மகளை பார்க்க அவரது தாய்  மாடிக்கு சென்றுள்ளார்.

அப்போது அவள் உடல் மின்விசிறியில் தொங்குவதையும், அருகில் உயிரற்ற நிலையில் அவளுடைய அன்பான பூனை கிடப்பதையும் கண்டார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் கதறினார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தான் வளர்த்த பூனையின் பிரிவை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola