தமிழ்நாட்டு பள்ளிக் கல்வி வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள்  நாளை (ஜூலை 31) வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

முன்னதாக 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 25ஆம் தேதி பிற்பகலில் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதி அன்று வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

10ஆம் வகுப்புத் தேர்வில் 93.8 % பேர் தேர்ச்சி

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே மாதம் 16ஆம் தேதி வெளியான நிலையில், அதில் 93.8 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த நிலையில், தேர்ச்சி அடையாத மற்றும் பொதுத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூலை மாதத்தில் துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. 

Continues below advertisement

தேர்வுகள் நடந்தது எப்போது?

குறிப்பாக ஜூலை 4 முதல் 10ஆம் தேதி வரை இந்த துணைத் தேர்வுகள் நடைபெற்றன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியாகலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைத் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

  • தேர்வர்கள், dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள்‌ செல்லவும். 
  • அதில், ரிசல்ட் என்ற வாசகத்தை கிளிக் செய்தால் ஒரு பக்கம் தோன்றும்.
  • அதில், ‘2SSLC Supplementary Exam, Jun / Jul 2025 - Result -Statement Of Marks Download’ என்ற வாசகத்தை க்ளிக் செய்யவும்.
  • அதில், தங்களின் தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்.

அடுத்ததாக, தேவைப்படும் மாணவர்கள் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் இதற்கான தேதி உள்ளிட்ட விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்னும் வெளியிடவில்லை. அதன் பிறகே மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

கூடுதல் விவரங்களுக்கு: https://www.dge.tn.gov.in/