சொந்தமாக யூடியுப் சேனல் தொடங்கிய ஆமிர் கான்
பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சொந்தமாக யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். 'ஆமிர் கான் டாக்கீஸ்' என்று இந்த சேனலுக்கு பெயர் வைத்துள்ளார். இனிமேல் தனது தயாரிப்பில் வெளியாகும் படங்களை இந்த சேனலில் வெளியிடவும் மக்கள் குறைந்த கட்டணம் செலுத்தி இந்த படங்களை பார்த்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தை இயக்கிய படங்களையும் இந்த சேனலில் வெளியிட இருப்பதாகவும் , தான் தொகுத்து வழங்கிய 'சத்யமேவ் ஜயதே' நிகழ்ச்சியை இலவசமாக இந்த சேனலில் வெளியிடஇருப்பதாகவும் ஆமிர் கான் தெரிவித்துள்ளார். இவை இல்லாமல் இளம் இயக்குநர்களின் படங்ககளுக்கு திரையரங்கங்கள் கிடைக்காத பட்சத்தில் அந்த படங்களை தனது யூடியுப் சேனலில் வெளியிட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் .
முதற்கட்டமாக அண்மையில் தான் நடித்து தயாரித்த 'சிதாரே ஜமீன் பர்' படத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்த சேனலில் வெளியிட இருக்கிறார். திரையரங்கில் ரூ 250 கோடி வசூலித்த இந்த படத்தை ரூ 100 கட்டணமாக செலுத்தி மக்கள் இந்த படத்தை பார்க்கலாம். இந்தியாவில் மட்டுமில்லாமல் அமெரிக்கா , ஜெர்மனி , ஃபிலிபைன்ஸ் , கனடா , ஆஸ்திரேலியா , ஸ்பெயின் உள்ளிட்ட 38 நாடுகளில் கட்டனம் செலுத்தி மக்கள் இப்படத்தைப் பார்க்கலாம்
ஓடிடி தரும் 120 கோடி வேண்டாம்
ஓடிடி நிறுவனங்களுக்கு மாற்றாக ஆமிர் கான் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளார். சிதாரே ஜமீன் பர் படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தை ஓடிடி நிறுவனத்திற்கு விற்க மறுத்துவிட்டார் அவர். இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பி பேசிய அவர் . " ஓடிடி நிறுவனம் தரும் ரூ 125 கோடி எனக்கு வேண்டாம். என்னுடைய ரசிகர்களின் 100 ரூபாய் தான் எனக்கு வேண்டும். எனக்கு என் படத்தின் மீது என் ரசிகர்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. என் படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் என் படத்தைப் பார்க்க போகிறார்கள். ஓடிடி நிறுவனம் தரும் 125 கோடியில் என் ஒருவனுக்கு மட்டும் லாபம் கிடைக்கும் என்றால் அது சினிமாத் துறையை ஒட்டுமொத்தமாக பாதிக்கிறது. திரையரங்க வசதிகள் இல்லாத மக்களை என் படங்கள் சென்றடைய வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இன்று இணைய வர்த்தகத்தில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதனால் கடைக்கோடி மக்களிடமும் என் படங்கள் சென்றடைவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. " என அவர் தெரிவித்துள்ளார்