2023 - 2024 பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு அறிவியல்‌ பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்ய நவம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ கூறி உள்ளதாவது:


நடைபெறவுள்ள ஏப்ரல்‌ 2024, பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும்‌ தனித்தேர்வர்களுக்கு அறிவியல்‌ பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய 10.08.2023 முதல்‌ 21.08.2023 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்சமயம்‌ தேர்வர்களின்‌ நலன்‌ கருதி அறிவியல்‌ பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய 06.11.2023 ( திங்கள்‌ கிழமை) முதல்‌ 10.11.2023 (வெள்ளிக்கிழமை) வரை வாய்ப்பு வழங்கப்படுகிறது. 


எனவே தேர்வர்கள்‌ இதற்கான விண்ணப்பப்‌ படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ 06.11.2023 முதல்‌ 10.11.2023 வரை பதிவிறக்கம்‌ செய்து, விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல்‌ எடுத்து 10.11.2023 -ற்குள்‌ சம்பந்தப்பட்ட மாவட்டக்‌ கல்வி அலுவலர் அலுவலகங்களை நேரில்‌ அணுகி, பதிவுக்கட்டணமாக ரூ.125/- ஐச் செலுத்தி தங்கள்‌ பெயரைப்‌ பதிவு செய்துகொள்ள வேண்டும்‌. இது பயிற்சி வகுப்பிற்கான பதிவு மட்‌டுமே.


பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தேர்வர்கள்‌ (முதன்முறையாக பத்தாம்‌ வகுப்பு தேர்வெழுதவுள்ள / எற்கனவே பத்தாம்‌ வகுப்பு பொதுத் தேர்வெழுதி அறிவியல்‌ செய்முறைத்தேர்வில்‌ தேர்ச்சிபெறாத / வருகைபுரியாத தேர்வர்கள்‌), இத்துறையால்‌ பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்படும்‌ நாட்களில்‌ சேவை மையத்திற்கு சென்று செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்தற்கான ஒப்புகை சீட்டு சமர்ப்பித்து
பொதுத் தேர்விற்கு பதிவு செய்துகொள்ளவேண்டும்‌. 


பின்னர்‌ வழங்கப்படும்‌ ஏப்ரல்‌ 2024-ற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை கொண்டே தேர்வர்கள்‌ செய்முறைத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்‌. மேலும்‌ கூடுதல்‌ விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகங்களைத்‌ தொடர்பு கொள்ளுமாறு தேர்வர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.


ஏப்ரல்‌ - 2024 பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ கலந்துகொள்ள நடத்தப்படும்‌ அறிவியல்‌ பாட செய்முறைப்‌ பயிற்சி வகுப்புகளில்‌ சேர்தலுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுரைகள்‌


1. தேர்வர்‌ விண்ணப்பத்திலுள்ள அனைத்து கலங்களையும்‌ தவறாது பூர்த்தி செய்தல்‌ வேண்டும்‌.


2. இவ்விண்ணப்பப்‌ படிவமானது இரண்டு படிவங்களில்‌ பூர்த்தி செய்யப்பட வேண்டும்‌. செய்முறை வகுப்பிற்கான கட்டணம்‌ ரூ.125/- பணமாக அந்தந்த மாவட்டக்‌ கல்வி அலுவலகத்தில்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌.


3. கீழ்க்கண்ட கல்வித்‌ தகுதிகளையுடைய தேர்வர்கள்‌ மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்‌.


(i) நேரடி தனித்தேர்வர்கள்‌:


2024 தேர்வு நடைபெறும்‌ மாதத்தின்‌ முதல்‌ நாளன்று (01.04.2024) 14 1/2 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்‌. மத்திய, மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில்‌ 8-ஆம்‌ வகுப்பு தேர்வில்‌ ஆங்கிலத்துடன்‌ தேர்ச்சி பெற்றுள்ள மாணவ/ மாணவியரும்‌ மற்றும்‌ 9ம்‌ வகுப்பு பயின்று இடையில்‌ நின்ற மாணவ/மாணவியரும்‌, தேர்வுத்‌ துறையால்‌ நடத்தப்படும்‌ எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும்‌ இடைநிலைப்‌ பள்ளி விடுப்புச்‌ சான்றிதழ்‌ பொதுத்‌ தேர்வை எழுதலாம்‌.


அனைவருக்கும்‌ கல்வி இயக்ககத்தின்‌ கல்வி காப்புறுதி திட்டத்தின்‌ கீழ்‌ பயின்று 8-ம்‌ வகுப்புத்‌ தேர்ச்சி பெற்றதாக மாற்று சான்றிதழ்‌ பெற்றவர்கள்‌.


உண்டு உறைவிடப்பள்ளியில்‌ 8-ம்‌ வகுப்புத்‌ தேர்ச்சி பெற்றதாக மாற்றுச்‌ சான்றிதழ்‌ பெற்றவர்கள்‌.


திறந்தவெளி பள்ளியில்‌ சி லெவல் சான்றிதழ்‌ பெற்றவர்கள்‌.


14 1/2 வயதை பூர்த்தி செய்த உழைக்கும்‌ சிறார்‌ கல்வி திட்டத்தின்‌ கீழ்‌ தொழிலாளர்‌ அமைச்சகம்‌ இந்திய அரசின்‌ கீழ்‌ வழங்கப்பட்ட முறைசாராக்‌ கல்வி மாற்றுச்‌ சான்றிதழ்‌ பெற்றவர்கள்‌.


மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தால்‌ நடத்தப்பட்ட திறந்தவெளிப்‌ பள்ளியில்‌ பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்‌ தேர்வு நடைபெறும்‌ மாதத்தின்‌ முதல்‌ தேதியன்று 14 1/2 வயது பூர்த்தி செய்யும்பட்‌சத்தில்‌ திறந்த வெளி பாடத்‌ திட்டத்தில்‌ தேர்வெழுதி தேர்ச்சி பெறாத பாடங்களை மட்டும்‌ தனித்தேர்வர்களாக 2023- 2024ஆம்‌ கல்வி ஆண்டில்‌ நடைபெறவிருக்கும்‌ பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுக்கு
விண்ணப்பிக்கலாம்‌.


ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்கள்‌:


முந்தைய ஆண்டுகளில்‌ பழைய  பாடத்திட்டத்தில்‌/சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில்‌ பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வெழுதி அறிவியல்‌ பாடத்தில்‌ தோல்வியுற்று, செய்முறைப்‌ பயிற்சி வகுப்பிற்கு பெயர்‌ பதிவு செய்திராத தனித்தேர்வர்கள்‌ மேற்குறிப்பிட்டுள்ள காலத்திற்குள்‌ பெயர்‌ பதிவு செய்ய வேண்டும் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர்‌ தெரிவித்துள்ளார்.