இதுகுறித்து அரசுக் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளதாவது:
ஜூலை 2025 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) துணைத்தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்துகொள்ளுதல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்:
ஜூலை 2025, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு, 31.07.2025 (வியாழக் கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
- மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று RESULT என்ற வாசகத்தை க்ளிக் செய்தால் ஒரு பக்கம் தோன்றும்.
- அந்த பக்கத்தில் "SSLC / HR SEC FIRST YEAR SUPPLEMENTARY EXAM, JULY-2025 PROVISIONAL CERTIFICATE DOWNLOAD" என்ற வாசகத்தினை க்ளிக் செய்யவும்.
- தொடர்ந்து தேர்வர்கள் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
- பிறகு, தங்களது தேர்வு முடிவினை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
॥. விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும் முறை:
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் மேற்காண் இணைய முகவரியில் NOTIFICATION பகுதிக்குச் செல்லவும்.
அதில் தோன்றும் SSLC Examination / Higher Secondary Examination என்ற வாசகத்தை "Click" செய்யவேண்டும். அதில், "SSLC / Hr Sec First Year Supplementary Examination, JULY-2025 SCAN COPY APPLICATION" என்ற வாசகத்தினை க்ளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, 04.08.2025 (திங்கட்கிழமை) காலை 11.00 மணி முதல் 05.08.2025 (செவ்வாய் கிழமை) மாலை 5.00 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.275/-தேர்வர்கள் விண்ணப்பிக்கவுள்ள அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக முகவரியை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Press Release என்பதை Click செய்து அறிந்து கொள்ளலாம்.