தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள கிங்டம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்த படம் இன்று வெளியாகியுள்ள இந்த படத்திற்கு காலை முதலே ரசிகர்கள் திரண்டு வருகின்றனர்.
இந்த படத்தை கெளதம் தின்னனுரி இயக்கியுள்ளார். விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்யஸ்ரீ போஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் வெங்கிடேஷ், அய்யப்பா, கோபராஜு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை கீழே காணலாம்.
அமுதபாரதி என்ற திரை விமர்சகர், முதல் பாதி நன்றாக உள்ளது என்றும், இரண்டாம் பாதி பரவாயில்லை என்றும் பதிவிட்டுள்ளார். முதல் பாதியில் காட்சிகள் உணர்வுப்பூர்வமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதியில் அது தொய்வாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். முதல் பாதி சண்டைக் காட்சிகள், காட்சி அமைப்பு, இடைவேளை அருமையாக உள்ளது. விஜய் தேவரெகொண்டா நடிப்பு அருமையாக உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். மொத்தமாக சுமாரமாக இருப்பதை விட ஒரு படி மேலே படம் உள்ளது.
எம்ஜே கார்டல் என்ற ட்விட்டர்வாசி, கதைதான் படத்தின் ஹைலைட். முதல் பாதி கதாபாத்திரங்கள் அறிமுகமாக உள்ளது என்றும், இரண்டாம் பாதி நாடகம் போல உள்ளது. விஜய் தேவரகொண்டாவின் சில காட்சிகள் அவரது நடிப்பின் சிறப்பாக அமைந்துள்ளது. இசை மற்றும் ஆக்ஷன் அருமையாக உள்ளது. கதை சொல்வது தொய்வாக இருப்பது பின்னடைவு ஆகும்.
ஜக்கு என்ற ட்விட்டர்வாசி விஜய் தேவரகொண்டாவின் ஜெயில் காட்சிகள் அருமை என்று பாராட்டியுள்ளார்.
மகிழ் அமுதன் என்ற ட்விட்டர்வாசி கிங்டம் வேற லெவல் என்றும் பவர்ஸ்டார் விஜய் தேவரகொண்டா என்றும் ப்ளாக்பஸ்டர் பொம்மா என்றும் பதிவிட்டுள்ளார்.
விகான் என்ற ட்விட்டர்வாசி, 5 ஸ்டாருக்கு 0.5 ஸ்டார் மட்டுமே தந்துள்ளார். எமோஷன் காட்சிகள் அர்த்தமற்று உள்ளது. பிஜிஎம் மிகவும் சத்தமாக உள்ளது. ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு தென்னிந்தியா முழுவதும் பெரிய நடிகராக உருமாறிய விஜய் தேவரகொண்டா அடுத்தடுத்து நடித்த வேர்ல்ட் பேமஸ் லவ்வர், லைகர் போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியையே தந்தது. இதனால், இந்த படத்தை அவர் பெரிதும் நம்பியிருந்தார். ஆனால், இந்த படமும் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.