2023- 2024ஆம் கல்வியாண்டில் இருந்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1.17 லட்சம் கம்பளிச் சட்டைகள் (ஸ்வெட்டர் ) வழங்கப்பட உள்ளன. மலைப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இவை வழங்கப்பட உள்ளன. 


தமிழகத்தின் மலைப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இதன் மூலம், அடுத்த கல்வியாண்டு முதல் மலைப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்கப்படும் தகவலை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.


இதுகுறித்துத் தமிழ்நாடு பாடநூல்‌ மற்றும்‌ கல்வியியல்‌ பணிகள்‌ கழகம்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பு:


ஒப்பந்தப் புள்ளி கோரும்‌ அறிவிப்பு நாள்‌: 28.09.2022


ஒப்பந்தப் புள்ளியில்‌ வழங்க வேண்டிய பொருளின்‌ விவரம்‌: 


2023-2024ஆம்‌ ஆண்டிற்கு 71.61 இலட்சம்‌ காலுறைகள் (socks) for Boys and Girls- தமிழ்நாட்டிலுள்ள பள்ளி மாணவ
மாணவிகளுக்கு தருவித்து வழங்குதல்‌.


ஒப்பந்தப்புள்ளி படிவம்‌ விற்பனைக்‌ காலம்: அனைத்து வேலை நாட்களிலும்‌ 29.09.2022 முதல்‌ 31.10.2022 வரை காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்‌.


ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌ மற்றும்‌ நேரம்‌- 01.11.2022 அன்று பிற்பகல்‌ 02.00 மணி வரை


முன்‌ கலந்தாய்வு கூட்டம்‌ நடைபெறும் நாள்‌, நேரம்‌ மற்றும்‌ இடம்-  12.10.2022 அன்று பிற்பகல்‌ 02.30 மணி, தமிழ்நாடு பாடநூல்‌ மற்றும்‌ கல்வியியல்‌ பணிகள்‌ கழகம்‌, கல்லூரிச்‌ சாலை, சென்னை-6


பெறப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள்‌ திறக்கப்படும்‌ நாள்‌, நேரம்‌ மற்றும்‌ இடம்‌ - 01.11.2022 அன்று பிற்பகல்‌ 02.30 மணி, தமிழ்நாடு பாடநூல்‌ மற்றும்‌ கல்வியியல்‌ பணிகள்‌ கழகம்‌, கல்லூரிச்‌ சாலை, சென்னை-6


*


ஒப்பந்தப் புள்ளி கோரும்‌ அறிவிப்பு நாள்‌: 28.09.2022


ஒப்பந்தப் புள்ளியில்‌ வழங்க வேண்டிய பொருளின்‌ விவரம்‌: 


2023-2024ஆம்‌ ஆண்டிற்கு 1.17 லட்சம் கம்பளிச் சட்டைகள் (Woollen Sweater) for Boys and Girls- தமிழ்நாட்டிலுள்ள பள்ளி மாணவமாணவிகளுக்கு தருவித்து வழங்குதல்‌.


ஒப்பந்தப்புள்ளி படிவம்‌ விற்பனைக்‌ காலம்: அனைத்து வேலை நாட்களிலும்‌ 29.09.2022 முதல்‌ 01.11.2022 வரை காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்‌.


ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌ மற்றும்‌ நேரம்‌- 02.11.2022 அன்று பிற்பகல்‌ 02.00 மணி வரை


முன்‌ கலந்தாய்வு கூட்டம்‌ நடைபெறும் நாள்‌, நேரம்‌ மற்றும்‌ இடம்-  13.10.2022 அன்று பிற்பகல்‌ 02.30 மணி, தமிழ்நாடு பாடநூல்‌ மற்றும்‌ கல்வியியல்‌ பணிகள்‌ கழகம்‌, கல்லூரிச்‌ சாலை, சென்னை-6


பெறப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள்‌ திறக்கப்படும்‌ நாள்‌, நேரம்‌ மற்றும்‌ இடம்‌ - 02.11.2022 அன்று பிற்பகல்‌ 02.30 மணி, தமிழ்நாடு பாடநூல்‌ மற்றும்‌ கல்வியியல்‌ பணிகள்‌ கழகம்‌, கல்லூரிச்‌ சாலை, சென்னை-6.


கூடுதல் விவரங்களுக்கு: http.www.textbookcorp.tn.gov.in


தொலைபேசி : 044- 28275852, 
இ -மெயில்: jd.tntbesc@tn.gov.in