நவராத்திரி என்றாலே அம்மன் வழிபாடும், கொலு பார்த்தலும்தானே..


நவராத்திரி விரதம் இருப்பார்கள் , என்ன வகையான உணவுகளை சாப்பிடலாம் என பார்க்கலாம். புரட்டாசி மாதம் மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள்  தொடங்கும் நவராத்திரி அக்டோபர் மாதம் நான்காம் தேதி முடிவடைகிறது. இந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களும்  அதிகளவான பெண்கள் விரதம் இருந்து வழிபடுவார்கள்.


நவராத்திரியில் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், அவரவருக்கு ஏற்றார் போல எளிய முறையில் விரதத்தை கடைபிடிக்கலாம். ஒன்பது நாட்களும் எளிய வகையில் விரத உணவுகளை செய்து உண்பதற்கு ஏற்ற இலகுவான வழிமுறைகளை நாம் பார்க்கலாம்.


ரவை, ஜவ்வரிசி, சாரை பருப்பு, தாமரை விதை, போன்றவற்றை பயன்படுத்தி எளிய விரத உணவுகளை தயாரித்து உண்ணலாம். சாரை பருப்பு மாவு தயிர் வடை  செய்யும் முறையை பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:


சாரை பருப்பு மாவு 


2  வேகவைத்த உருளைக்கிழங்கு


2 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது


½ டீஸ்பூன் துருவிய இஞ்சி


1 தேக்கரண்டி உப்பு


1 கப் தயிர்


½ தேக்கரண்டி கல் உப்பு


¼ தேக்கரண்டி வறுத்த சீரக தூள்


¼ தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்


1 டீஸ்பூன் பச்சை கொத்தமல்லி



செய்முறை:


ஒரு கிண்ணத்தில் நன்றாக வேகவைத்த உருளைக்கிழங்கை  மசித்து கொள்ள வேண்டும் பின்னர் மிளகாய் , துருவிய இஞ்சி, சாரை பருப்பு மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கலந்து கொள்ள வேண்டும். அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்த பின்னர், அதனை  எலுமிச்சை அளவு சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும். பின்னர் அந்த உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து மெதுவாக அழுத்தி சிறிய வட்ட வடிவமாக பிடித்து வைக்க வேண்டும்.


பின்னர் அடுப்பில் எண்ணெய் ஓரளவு சூடானதும் ,இந்த பிடித்து வைத்திருக்கும் கிழங்கு வடைகளை நன்கு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்க வேண்டும். வறுத்து எடுத்த கிழங்கு வடைகளை ஓரமாக வைத்துவிட்டு தயிர் கலவையை தயார் செய்ய வேண்டும்.


தயிர் கலவை:


தயிரை மிருதுவாக அடித்து அதில் கல் உப்பு, சீரகத்தூள், சிவப்பு மிளகாய் தூள் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து வைத்துள்ள வடைகளை தயிர் கலவையில் போட்டு நன்றாக ஊற வைத்து உண்ணலாம். அதில் கூடுதலாக சிறிது சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள்  ,பச்சை கொத்தமல்லி போன்றவற்றை மேலாக தூவி சாப்பிடலாம்.


2. தயிர் உருளைக்கிழங்கு செய்முறை:
தேவையான பொருட்கள்:


500 கிராம் சிறிய உருளைக்கிழங்கு


15 கிராம் வேர்க்கடலை


1 டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது


1 கிராம் கல் உப்பு


2 டீஸ்பூன் வறுத்த சீரகம்


1 1/2 கப் தயிர்


2 டீஸ்பூன்  நெய்


10 கறிவேப்பிலை



செய்முறை:


ஒரு பெரிய கிண்ணத்தில் தயிரை எடுத்து நன்கு மென்மையாகும் வரை கலக்கிக் கொள்ள வேண்டும். அதில் கல் உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு கிளற வேண்டும்.


பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கு, சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து, 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு களிமண் அடுப்பில் வைத்து  சமைக்கவும் ,ஆறியதும் உருளைக்கிழங்கை பாத்திரத்தில் போட்டு கறிவேப்பிலை, சிறிதாக நறுக்கிய வேர்க்கடலையை  சேர்த்து நன்கு கலக்கவும். மிக சுவையான தயிர் உருளைக்கிழங்கு தற்போது தயாராகிவிட்டது இதில் அலங்காரத்திற்கு நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகளையும் சிறிது பொடி செய்யப்பட்ட சீரக தூள் மேலே தூவலாம்.


மாம்பழ, தேங்காய் பால் ஐஸ்கிரீம்:



தேவையான பொருட்கள்
1 கப் தேங்காய் பால்
1 கப் மாம்பழம் 
1 டீஸ்பூன் தேன் ( தேவையான அளவு)
செய்முறை:


ஒரு பிளெண்டரில், பால் மற்றும் தோல் நீக்கிய மாம்பழத்தை எடுத்துக்கொண்டு அதனுடன் தேவையான அளவு தேனி கலந்து மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையை ஐஸ்கிரீம் அச்சில் ஊற்றி உறைய வைத்து எடுத்தால் சுவையான மாம்பழ தேங்காய் பால் ஐஸ்கிரீம் கிடைத்துவிடும்.


திணை அரிசி கிச்சடி:


தேவையான பொருட்கள்
1 கப் ஊறவைத்த திணை அரிசி
1/2 தேக்கரண்டி நெய்
4 கறிவேப்பிலை சிறிது
2 நறுக்கிய பச்சை மிளகாய்
கரம் மசாலா சிட்டிகை
மஞ்சள் ஒரு சிட்டிகை
3 கப் தண்ணீர்தேவையான அளவு உப்பு.


செய்முறை:


குக்கரில் நெய்யை சூடாக்கி, கறிவேப்பிலை, மிளகாய், மஞ்சள்தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.அதை கொதிக்க வைக்கவும். திணை அரிசியை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து தயாராக இருக்கும் திணை அரிசி கிச்சடியை ஊறுகாய் மற்றும் தயிருடன் சூடாக பரிமாறவும். இவ்வாறாக நவராத்திரி விரதத்தை கடைபிடிப்பதற்கு மேற்கண்ட உணவுப் பொருட்களை தயாரித்து உங்கள் விழாக்காலத்தை கொண்டாடுங்கள்.