புதுச்சேரியில் போக்குவரத்து காவலரை மதுபோதையில் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து அவர் கையில் மாவு கட்டுடன் மன்னிப்பு கேட்கும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். புதுச்சேரி மங்களம் பகுதியை சேர்ந்தவர் வினாயகம் (33) இவர் வில்லயனூர் மேற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணிபரிந்து வருகின்றார், இவர் கடந்த 12 ம் இரவு புதுச்சேரி விழுப்புரம் மாவட்டம் எல்லை பகுதியான மதகடிப்பட்டில் பணியில் இருந்த போது அங்கு ஒரு டாடா ஏஸ்ஸும் இருசக்கர வாகனமும் மோதி கொண்டு விபத்து ஏற்ப்பட்டுள்ளது, விபத்து குறித்து விசாரணை செய்து வந்துள்ளார் விநாயகம்.
அப்போது விபத்துகுள்ளான இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களும் குடி போதையில் இருந்தது தெரியவந்தது, மேலும் அங்கு விபத்துக்குள்ளான வாகனத்தை காவலர் விநாயகம் புகைப்படம் எடுக்க முயன்ற போது போக்குவரத்து காவலரை மறித்த அந்த வாலிபர்கள் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது செல்ஃபோனை பறிக்க முயன்று பின்னர் சராமாரியாக தாக்கியுள்ளனர்.
காவலரை தாக்குவதை அப்பகுதியில் இருந்த பொது மக்கள் தங்களின் செல்ஃபோனில் வீடியோ எடுத்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியதை அடுத்து, போக்குவரத்து காவலர் விநாயகம் திருபுவனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விபத்துகுள்ளான இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் தன்ராஜ் கைது செய்யப்பட்டார். போலீசாரை தாக்கியவர்கள் விழுப்புரம் மாவட்டம் எல்.ஆர் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இதில் தன்ராஜ் உடன் வந்த வினோத் என்கிற வாலிபர் தான் போக்குவரத்து காவலரை தாக்கினர் என்பது தெரிய வந்துள்ளது, இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த திருபுவனை போலிசார் காவலரை தாக்கிவிட்டு தலைமறைவான வினோத் மற்றும் மகாலிங்கத்தை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி எல்லை பகுதியான மதகடிப்பட்டு ஏரி கரையில் பதுங்கி இருந்த வினோத் மற்றும் மகாலிங்கத்தை போலீசார் கைது செய்த முற்பட்ட போது அவர்கள் போலிசாரை கண்டு தப்பி ஒட முயன்றதில் வினோத்திர்கு கையில் முறிவும், மகாலிங்கத்திற்கு தலையில் அடிபட்டதை அடுத்து அவர்களை மருத்துவமனை அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர், மேலும் கை முறிவு ஏற்ப்பட்ட வினோத், மாவு கட்டுடன் மன்னிப்பு கேட்கும் வீடியோவையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்