கரூரில் முன் விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய சம்பவத்தில் ஒருவர்  கைது செய்யப்பட்டார்.


இது குறித்து போலீஸ் தரப்பில்  கூறப்படுவதாவது: கரூர் ராயனூர் அகதிகள் முகாமை சேர்ந்தவர்  ரஞ்சித் பெயிண்டர். அதே பகுதியைச் சேர்ந்த வசீகரன். இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரதம் இருந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த வசீகரன், ஆனந்த், சுப்பிரமணியன், ஆகியமூன்று பேரும் சேர்ந்து முன் விரதம் காரணமாக ரஞ்சித்தை தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த  வசீகரன், ஆனந்த், சுப்பிரமணியன் ஆகிய மூன்று பேரையும் சேர்ந்து கத்தியை எடுத்து ரஞ்சித்தை குத்தினர். இதனால் படுகாயம் அடைந்த அவர் அந்த இடத்தில் சுருண்டு விழுந்தார். இதை அடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதைஅடுத்து கத்தியில் படுகாயம் அடைந்த ரஞ்சித்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்த கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தாந்தோன்றி மலை போலீஸ்  மணி சேகரன் வழக்குப்பதிந்து  வசீகரனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய  ஆனந்த், சுப்பிரமணியன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


 


டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை.


 




 


 


குளித்தலை அருகே உள்ள தேசிய மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாபுஜி டிரைவர். இவருக்கும், மணப்பாறை அருகே உள்ள குமாரவாடி பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கடந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம். தற்போது பாபுஜி தேசிய மங்கலத்தில் உள்ள தனது அக்கா பானுமதி உடன் வசித்து வந்துள்ளார். மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்ட காரணத்தால் பாபுஜிக்கு குடிப்பழக்கம் அதிகமாகி அவருக்கு வயிறு மற்றும்  முதுகு தண்டவடத்தில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார்.


 




 


இதை பார்த்த அவரது உறவினர்கள் பாபுஜியே மீட்டு    சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கரூர் மாவட்டத்தில் மது பாட்டில்கள் பறிமுதல் 4 பேர் மீது வழக்கு பதிவு.



கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன 12 முதல் 10 மணி வரை கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசர்களும் அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் லாலாபேட்டை, குளித்தலை, கா. பரமத்தி மற்றும் வாங்கல் போன்ற பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக நான்கு பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து  50 குவாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.