ஆண்டு தோறும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.
கரூரில் 96 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் நன்மை பெறும் வகையில் ஆண்டுதோறும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்:
கரூரில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வேலை ஆணையர் சட்டமன்ற உறுப்பினர் குளித்தலை மாணிக்கம், அரவக்குறிச்சி இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, மேய கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், இளைஞர்களுக்கு சிந்தனை லட்சியம் குறிக்கோள் வேண்டும். சிந்தனை, அதற்கேற்ற உழைப்பு இருந்தால் உங்களால் முடியும், என்னால் முடியும் நம்மால் முடியும், தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளதை அடுத்து தமிழக முழுவதும் 71 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 1 லட்சத்து 14,000 இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
1.14 ஆயிரம் பேருக்கு வேலை
அப்போது பேசிய செந்தில் பாலாஜி 220 நிறுவனங்கள் பங்கு பெற்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக மு. க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் இந்த துறை சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக, அமைச்சர் கணேசன் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆணைகளை வழங்கி வருகிறார். கரூர் மாவட்டத்தில் 96 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு ஆணைகளை பிறப்பித்துள்ளார். முதல்வராக மு .க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் 1 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு தனியார் துறைகளில் பணி ஆணைகளை வழங்கி உள்ளது. அரசு கலைக்கல்லூரியில் பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள்.
முதல்வரின் அனுமதி பெற்று அவை நிறைவேற்றப்படும். ஆண்டு தோறும் இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றார்.
இதனை தொடர்ந்து வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தகுதி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார். கருர் மாநகராட்சி மன்ற தலைவர் எஸ்.பி கனகராஜ், ஆர் எஸ் ராஜா அன்பரசன் லிங்கம் சக்திவேல் கரூர் மாநகராட்சி பகுதி செயலாளர் கரூர் கணேசன், வக்கீல் சுப்பிரமணியன், கவுன்சிலர் மோகன்ராஜ், நகராட்சி தலைவர்கள் குணசேகரன், முனைவர் ஜான், சகோதரா ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் எம் எஸ் கருணாநிதி ரமேஷ் பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் தம்பி சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.