அரூர் அருகே வனப்பகுதியில் சாலையோரம் சிதறி கிடந்த ரூபாய் நோட்டு மாதிரி தாள்களை முண்டியடித்து எடுக்க சென்ற பெரியவர்கள் மற்றும் சிறுவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டி வனப்பகுதியில் உள்ள காட்டு மாரியம்மன் கோயில் அருகே 2000, 200, 100, 10  ரூபாய் நோட்டுகள் மாதிரியான, குழந்தைகள் விளையாடும் கலர் தாள்களை மர்ம நபர்கள் வீசி விட்டு சென்றுள்ளனர். இந்த கலர் தாள்கள் சாலையிலும், சாலையோரத்திலும் சிதறி கிடந்தது. இதனால் சாலையில் பயணம் செய்த சிலர் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடக்கிறது என நினைத்து அந்த தாள்களை முண்டியடித்துக் கொண்டு பெருக்கினர். அப்பொழுது தாள்களை கையில் எடுத்த பிறகு, அது குழந்தைகள் விளையாடும் கலர் தாள்கள் என தெரியவந்ததால், திரும்பி சென்றனர். ஆனாலும் ரூபாய் நோட்டுகள் போலவே இருந்ததால், அங்கு வந்த பெரியவர்களும் சிறியவர்களும் போட்டி போட்டுக் கொண்டு சிதறி கிடந்த கலர் தாள்கள் முழுவதையும் எடுத்துச் சென்றனர். மேலும் 2000, 200, 100, 10 ரூபாய் நோட்டுகள் போலவே, கலர் தாள்கள் இருந்தது. இதில் 2000 தவிர மற்ற தாள்களை கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவதைப் போல விடுவதற்கான வாய்ப்புகளும் இருந்து வருகிறது. மேலும் தாள்கள் சாலையோரமும், சாலையிலும் சிதறிக் கிடந்ததால், சாலையில் பயணித்த அனைவரும் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடப்பதாக நினைத்து ஏமாந்து போயினர். மேலும் சிதறி கிடந்த தாள்களை சிலர் முண்டியடித்துக் கொண்டு எடுத்ததால் சிறிது நேரம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



 


ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் கடந்த வாரங்களை விட இந்த வாரம் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவு.

 

தருமபுரி மாவட்டம்  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு வெளி மாநிலம் வெளி மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை நாட்களில்  வந்து செல்வது வழக்கம். காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்து வினாடிக்கு 2000 கன அடியாக இருப்பதால், ஒகேனக்கல் ஐந்தறிவி பகுதிகளில் நீர்வரத்து இன்றி, வெறும் பாறைகளாக காட்சியளித்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில்  நீர்வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து வருகிறது.    ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால், ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பணிகள் வருகை கடந்த வாரங்களை விட  குறைவாகவே காணப்பட்டது.



 

மேலும் ஒகேனக்கல் வந்த, சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்து, அருவிகளில் குளித்தும், மீன் சமையலை உண்டு மகிழ்ந்தனர். ஆனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் பரிசல் துறை, மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள், வருவாய் இல்லாமல் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.