சிவகங்கை காரைக்குடி வியாழக்கிழமை சந்தையில் மீன்கடை போடுவதில் இருதரப்பிற்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. அதில் ஒரு தரப்பான திருச்செல்வம் என்பவரும், மற்றொரு தரப்பான முத்துமணி என்பவரும் நேற்று இரவு மீன்கடை விவகாரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




வாக்குவாதம் முற்றி இருவரும் மோதிக்கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டதில் திருச்செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார்.   படுகாயங்களுடன் முத்துமணி சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 




காரைக்குடி டிஎஸ்பி அருண் மற்றும் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையிலான போலீசார் திருச்செல்வம் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருதரப்பும் அடுத்தடுத்து மோதல் சம்பவங்களில் ஈடுபடாத வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.