Crime: குடிபோதையில் பெற்றோரிடம் தகராறு செய்த அண்ணன்.. பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற தம்பி..! திருச்சியில் பயங்கரம்..!

திருச்சி மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர் பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Continues below advertisement
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் புரவி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன்கள் அரிராஜன் (வயது 42), அசோக்குமார் (40), சரவணன் (38). அசோக்குமார் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். ஆட்டோ டிரைவரான அரிராஜன் திருமணமாகி குடும்பத்துடன் திருச்சி குட்ஷெட் ரோட்டில் வசித்து வந்தார்.
 
அண்ணனை பீர்பாட்டிலால் குத்திய தம்பி:
 
இந்நிலையில் கடந்த 17-ந் தேதி புரவி நகருக்கு சென்ற அரிராஜன், தனது பெற்றோரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த சரவணன், ஏன் அடிக்கடி வந்து பெற்றோரிடம் பணம் கேட்கிறாய் என்று அரிராஜனை கண்டித்துள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சரவணன், அரிராஜனை பீர் பாட்டிலால் வயிறு மற்றும் தோள்பட்டையில் குத்தியதாக தெரிகிறது.
 
இதில் படுகாயம் அடைந்த அரிராஜனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அரிராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 
இந்நிலையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து கொலை செய்யபட்டவரின் உறவினர் உடனடியாக குற்றவாளியை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தினர். ஆகையால் காவல்துறையினர் அதிரடியாக தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று சரவணனை நொச்சியத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதி உத்தரவின்படி சரவணனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

Continues below advertisement

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola