ஐஐடி மெட்ராஸ் மூலம் தொழில் ஊக்குவிப்பு செய்யப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனமான TuTr ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் அறிவுசார் சொத்துரிமைக்காக இக்கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.
ஐஐடி மெட்ராஸ் மூலம் தொழில் ஊக்குவிப்பு செய்யப்படும் டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘TuTr Hyperloop’ இக்கல்வி நிறுவனத்துடன் இணைந்து ஹைப்பர்லாப் தொழில்நுட்பத்தில் அறிவுசார் சொத்துரிமையை உருவாக்கும் பணியில் இணைந்து செயல்படுகிறது. ஹைப்பர்லாப் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயன்பாட்டிற்காக டாடா ஸ்டீல் நிறுவனத்துடனும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் கூட்டாண்மையில் ஈடுபட்டுள்ளது.
ஹைப்பர்லாப் தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பு மற்றும் அமைப்பு முறைகளை உருவாக்கி மேம்படுத்துவதற்காக பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான சேவைக் துறையில் ஈடுபட்டுள்ள மிகப்பெரிய இந்திய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, "TuTr Hyperl oop’ நிறுவனம் ஐஐடி மெட்ராஸ் உடன் அண்மையில் அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ்-ல் அமைந்துள்ள நேஷனல் சென்டர் ஃபார் கம்பஷன் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் கடந்த 2022-ம் ஆண்டு முதல் 'TuTr Hyperl oop' ஒரு டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக இயங்கி வருகிறது. புத்தாக்க மையமான டீம் ஆவிஷகார் செயல்படுத்திவரும் பணிகளை முன்னெடுத்துச் செல்லவும், ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை வணிகப்படுத்தவும் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
இந்த கூட்டுமுயற்சி குறித்து எடுத்துரைத்த ஐஜடி மெட்ராஸ்-ன் என்சிசிஆர்டி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சத்யநாராயணன் சக்ரவர்த்தி கூறுகையில், "பிற போக்குவரத்து சாதனங்களோடு ஒப்பிடும்போது குறைந்த செலவில், அதே நேரத்தில் பசுமை சார்ந்த வகையில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப நம்பகமான போக்குவரத்தை வழங்குவதே TuTr நோக்கமாகும்.
ஐஐடி மெட்ராஸ்-ன் விண்வெளிப் பொறியியல் துறையின் ஆசிரியராகவும் பணியாற்றி வரும் பேராசிரியர் சத்யநாராயணன் சக்ரவர்த்தி மேலும் கூறும்போது, “சரக்குப் போக்குவரத்தில் உள்ள பிரச்சனைகளைக் களைந்து தொடர்புடையவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் ஆரம்பகட்டமாக அதில் முழு கவனம் செலுத்தப்படும். இந்தியாவிலும், உலக அளவிலும் பயணிகள் போக்குவரத்துக்காக அதிவேக இயக்க வழித்தடங்களை உருவாக்குவதில் இப்பணிகள் ஒரு தொடக்கமாக அமையும்" என்றார்.
ஐரோப்பா- இந்தியா ஹைப்பர்லூப் கூட்டு ஒத்துழைப்பு
ஐரோப்பா- இந்தியா இடையே 'இயக்கத்திற்கான ஹைப்பாலூப் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக முன்னணி ஐரோப்பிய தொழில்நுட்ப நிறுவனமான 'Hardt Hyperl oop' நிறுவனத்துடன் 'TuTr Hyperloop உத்திசார் கூட்டாண்மையை சமீபத்தில் ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த வர்த்தகக் குழுவினர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர்கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் நெகர்லாந்து உள்கட்டமைப்பு மற்றும் நீர் மேலாண்மைத் துறை அமைச்சர் மார்க் ஹார்பர்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை உருவாக்குதல், பரிசோகித்தல், அபாயங்களைக் களைதல், பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் ஆகிய பணிகளை கூட்டு முயற்சியுடன் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி,TuTr மற்றும் Hardt ஆகியவை ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பது குறித்த விவாதங்களை மேற்கொள்ளும். 2030-ம் ஆண்டு வாக்கில் சோதனை முறையிலான இயக்கத்தை நடைமுறைப்படுத்துவது என்ற இலக்கை நோக்கி திட்டமிடல் உருவாக்கப்படும். ஹைப்பா்லாப் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், வணிகர் தியான பயன்பாட்டை ஏற்படுத்தவும், எதிர்காலத்தில் போக்குவரத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவும் இந்த கூட்டாண்மை துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TuTr Hyperl oop-ன் இணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான டாக்டர் அரவிந்த் பரத்வாஜ் கூறும்போது, "இந்தியாவில் குறைந்த செலவில் நீடித்த அதிவேக இயக்கத் தொழல்நுட்பத் தீர்வை உருவாக்க ஐஐடி மெட்ராஸ் சுற்றுச்சூழல் அமைப்பின்கீழ் TuTr Hyperl oop ஆத்மநிர்பார் முயற்சியை மேற்கொண்டுள்ளது" எனத் தெரிவித்தார்.