நடிகை ஹன்சிகா மோத்வானியின் ஸ்விம்மிங் டிரஸ் புகைப்படம் ஒன்று மூன்று லட்சம் லைக்குகளை குவித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர், பல தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர், ரவி தேஜா, தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ படத்தின் திரைப்படம் முடிந்து, வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படத்தில் நடித்துள்ளார்.


மேலும்,  ‘ரவுடி பேபி’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் பார்ட்னர், 105 மினிட்ஸ், மை நேம் இஸ் ஸ்ருதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி பிஸியாக இருக்கும் ஹன்சிகா சுற்றுலா செல்வதையும் வழக்கமாகிக் கொண்டிருக்கிறார். சமூவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அவர் சுற்றுலாத்தளங்களில் எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் வெளியிடுவார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், தற்போது ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடலில் ஸ்விம்மிங் டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


 






இந்த புகைப்படத்தை பார்த்து கவர்ந்த ரசிகர்கள், புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி தெறித்துவிட்டிருக்கிறார்கள்.  அதாவது 3 லட்சத்திற்கும் மேல் அந்த புகைப்படம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு கடலில் ஸ்விம்மிங் டிரஸ்ஸிஸ் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் தண்ணீரில் சுற்றி விளையாடுவது போல் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது லைக்ஸ்களை அள்ளிக்குவித்துள்ளது.


 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண