பண்டிகை காலம்னாலே கொண்டாட்டம்தான். அதிலும் தீபாவளின்னா சொல்லவா வேண்டும்!. புத்தாடை , பட்டாசு என வழக்கமான கொண்டாட்டங்களோட சேர்ந்த்து சில ஸ்மார்ட் கேட்ஜெட்டையும் இணைத்து உங்கள் பண்டிகையை இன்னும் புதுமையாக்கலலாமே.. எப்படினு கேட்குறீங்களா அதுக்காகத்தான் ஆன்லைன் சந்தையில் நிறைய தீபாவளி கேட்ஜெட்ஸ் அறிமுகமாகியிருக்கே!. ஒலி மூலமாக பட்டாசு சத்தங்களையும் வண்ண விளக்குகள் மூலமாக மத்தப்பு ஒளியையும் அப்படியே பெற முடியும். சுற்றுச்சூழலுக்கு இதனால பாதிப்புகள் ஏற்படாது என்பதுதான் ஹைலைட். சரி அப்படி சந்தையில் அறிமுகமாகியிருக்கும் தீபாவளி கேட்ஜெட்ஸை பார்க்கலாம்.
Loud Firecrackers with LED Light :
இந்த கேட்ஜெட் பட்டாசு போலவே ஒலி எழுப்பக்கூடியது.அது மட்டுமல்லாமல் ‘ladi cracker’ என்னும் பட்டாசின் சிகப்பு நிற ஒளியை அப்படியே பிரதிபலிக்கக்கூடிய வகையில் உருவாக்கியுள்ளனர். ஒலி , ஒளியை பிரதிபளிக்கும் இதனை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம்
இந்த வகை எலெக்ட்ரிக் பட்டாசு உண்மையான பட்டாசுகளை போன்ற ஒலி மற்றும் ஒளியை பிரதிபலிக்கிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள ரிமோட் மூலம் பட்டாசின் ஒலி அளவு மற்றும் நிறங்களை மாற்றியமத்துக்கொள்ளலாம்.
இதன் மூலம் தீபாவளி பண்டிக்கான வண்ண விளக்கு அலங்காரத்தை செய்துக்கொள்ளலாம். மின்சாரம் மூலம்தான் இது செயல்படும் என்பதல்ல..usb போர்ட் மூலம் மொபைல், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களிலும் இதனை பொருத்தி, அதில் உள்ள பவர் சப்ளை மூலமாகவும் இயங்க வைக்கலாம்.ரிமோட் மூலமாக விளக்குகளின் வண்ணங்கள் மற்றும் அவை ஒளிரும் விதங்களை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
RGB controller
இதனை RGB மின் விளக்குகளுடன் இணைத்தால் அவை வண்ணங்களை ஒளிரும் ஸ்மார்ட் விளக்காக மாறிவிடும். இது மைக்ரோபோனுடன் வருவதால் இதில் பட்டாசின் ஒளியை நம்மால் கேட்க முடியும். இதன் விலை ரூ.1049 ஆகும்
Generic Changeable
பார்ப்பதற்கு அச்சு அசலாக பட்டாசு போலவே தோற்றம் கொண்ட இதனை எல்.இ.டி விளக்குகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பட்டாசு போன்ற ஒளி , ஒலி எழுப்பக்கூடியது. மேலும் இதில் அசல் பட்டாசு வெளிச்சம் அல்லது சிகப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, பச்சை போன்ற வண்ண விளக்குகளால் ஆன ஒளியையும் இதன் மூலம் பெற முடியும்.
கோலம் போட்டு கொண்டாடாத பண்டிகை என எதுவும் உண்டா. ஆனால் நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கையால் , அதற்கான இடமோ நேரமோ இருப்பதில்லை. ஆனால் அப்படியான நிலையில் இருப்பவர்களுக்காக தீபாவளி ஸ்பெஷல் ஆஃபராக ரங்கோலி ஸ்டிக்கர் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ரங்கோலி 193 ரூபாய் என்ற ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.