பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவது மிகப்பெரிய குற்றம் என்று அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் பல முறை எச்சரித்தும் பல இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு பெண் சரமாரியாக பளார் விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலியல் சீண்டல்:
கர்நாடகாவில் அமைந்துள்ளது மாண்ட்யா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள கே.ஆர். பீடே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு பேருந்து ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது, பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவரிடம் ஒரு நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், அந்த பயணியை முதலில் எச்சரித்துள்ளார்.
வெளுத்து வாங்கிய பெண்:
அந்த பெண் எச்சரித்த பிறகும் அந்த பயணி அதேபோன்று சீண்டலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், அந்த பெண் ஆத்திரமடைந்துள்ளார். இதனால், அந்த ஆணுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கில் பேருந்திலே அனைவரின் முன்பும் அந்த ஆசாமியின் சட்டையை பிடித்து கன்னத்திலே பளார் பளார் என்று அறைவிட்டார்.
மேலும், அந்த நபரிடம் உனக்கு அக்கா தங்கை இல்லையா? என்று கேட்டதுடன், கன்னட மொழியில் சரமாரியாக கேள்வி எழுப்பினர்,. பின் அந்த பயணியை சட்டையை பிடித்து பேருந்தை விட்டு வெளியே தள்ளினார். அப்போது, அங்கே இருந்த சிலர் அந்த பயணியின் சட்டையை பிடித்து இழுத்து நிறுத்தினர். ஆனால், போலீசிடம் சிக்கிக்கொண்டால் என்ன ஆகுமோ? என்ற பயத்தில் அந்த நபர் தப்பியோடினார். இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த சக பயணி ஒருவர் வீடியோவாக எடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னிடம் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு பெண் சரமாரியாக பளார்.. பளார் என்று சட்டையை பிடித்து அறை விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தன்னிடம் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு அனைவரின் முன்பே தக்க பாடம் புகட்டிய பெண்ணுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
மேலும் படிக்க: Crime: 'அடங்காத சாதிவெறி'.. அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடியதற்காக இளைஞர் படுகொலை - பகீர் பின்னணி..!
மேலும் படிக்க: Odisha Train Accident: தண்டவாளத்தில் காதல் கவிதைகள்.. பதைபதைக்க வைத்த காட்சிகள்..ரயில் பெட்டிகளுடன் நொறுங்கிய கனவுகள்