ஹைதராபாத்தில் பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்ணை நண்பரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள பச்சுபள்ளியில் பணியாற்றி வந்தார். வேலை நிமித்தமாக ஹைதராபாத்தில் தங்கி பணியாற்றி வந்த அந்த இளம்பெண்ணின் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பப்பில் நடைபெற்றுள்ளது.


இந்த பார்ட்டியில் அந்த பெண்ணின் நண்பர்களும், பிற நண்பர்களும் பங்கேற்றுள்ளனர். கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற இந்த பார்ட்டி முடிவடைய நள்ளிரவு ஆகியுள்ளது. இதனால், அந்த பெண்ணின் நண்பர்கள் மூன்று பேர் அந்த இளம்பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் நான்கு பேரும் அவரவர் வீட்டிற்கு செல்ல அதிகாலை 4 மணி ஆகியுள்ளது. இந்த பார்ட்டியின்போது அவர்கள் மது அருந்தியதாக கூறப்படுகிறது.




அதிகாலை 4.30 மணியளவில் அந்த இளம்பெண் தான் தூங்கச்செல்வதாக கூறிவிட்டுச் தனது வீட்டின் உள்ளே சென்றுவிட்டார். அப்போது பிற நண்பர்களும் அவரவர் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளனர். காலை 6.15 மணியளவில் அந்த பெண் தனது உடலில் அளவுக்கதிகமான வலியை அனுபவித்துள்ளார். கண்விழித்து பார்த்தபோது அவரது நண்பர் அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால், அவரை கீழே தள்ளிவிட அந்த இளம்பெண் முயற்சித்துள்ளார்.


பின்னர், தோழி என்றும் பாராமல் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து வெளியில் கூறினால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தில் கடந்த ஓரிரு தினங்களாக அந்த இளம்பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.




பின்னர். தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பச்சுபள்ளி காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பார்ட்டிக்கு அழைத்துச் சென்ற நண்பரே தோழியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை : காணாமல்போன அண்ணன், தம்பி; தற்பாலினச் சேர்க்கை விவகாரத்தில் கொலை? வெளியான பகீர் தகவல்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண