செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த மேற்கு செய்யூர் இப்பகுதியை சேர்ந்த மணி மனைவி லட்சுமி 40. ஒருவர் திருமணமாகி 2 மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில்  லட்சுமி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது மகன்  சுமன் லட்சுமியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெரிய வெண்மணி பகுதியிலுள்ள கல் குவாரியில் இருந்து சவுடு மண் ஏற்றிக்கொண்டு  பின்னால் வந்து கொண்டிருந்த லாரி இருசக்கர வாகனத்தின் பின்னால் பலமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து கொண்டு இருந்த லட்சுமி சாலையில் தவிற லாரி அவரது உடல் மீது ஏறியது. 



 

இதில் லக்ஷ்மி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உறவினர்கள் ஆத்திரமடைந்து லாரியை நிறுத்தி  கண்ணாடியை அடித்து உடைத்தனர். அதோடு லாரி ஓட்டுநரான மணிகண்டன் செய்யூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

தொடர்ந்து  பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்தவரின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.