கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் மலைக்கோவிலில் ரோப்கார் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் அருகே பெண் ஒருவர் இறந்த நிலையில் நேற்று கிடந்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் அவர் விஷம் குடித்து இறந்து கிடப்பதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


 




அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரித்த போது இறந்த பெண் குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராசு என்பவரின் மனைவி பழனியம்மாள் (வயது 50) என்பதும், ராசு கரூர் மாவட்டம், துக்காச்சி மூலக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உதவியாளராக பணிபுரிவது தெரியவந்துள்ளது. ராசுவுக்கும், பழனியம்மாளுக்கும் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். 


கடந்த 2 ஆண்டுகளாக பழனியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாராம். இந்த நிலையில் ஆடி மாதம் குல தெய்வ வழிபாடு செய்வதற்காக கரூரில் இருந்து வளையப்பட்டிக்கு ராசு மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோர் நேற்று முன்தினம் வந்துள்ளனர். அன்று மாலை குளித்தலையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதாக பழனியம்மாள் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.


இதன் பின்னர் அவர் வீட்டிற்கு செல்லவில்லையாம். இந்த நிலையில் அய்யர்மலையில் உள்ள ரோப்பகார் கட்டிடத்தின் அருகே விஷமருந்து குடித்து இறந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ராசு கொடுத்த புகாரின் பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழனியம்மாள் உடல் அருகே கிடந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


50 வயது மதிக்கத்தக்க பழனியம்மாள்  குளித்தலை அய்யர்மலை அருகே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது நான்கு மகள்கள் மற்றும் அவரது கணவர் உட்பட அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 


கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.









சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண