Crime: உத்தர பிரதேசத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.  குறிப்பாக டெல்லியில் நடக்கும் வன்முறை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.  இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. 


பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை


உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியில்  சாலையின் ஓரத்தில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர்.   தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்பு பிரேத  பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், கொடூரமாக ஆயுதத்தால் வெட்டி கொலை செய்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  அப்போது, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 


அதாவது, சுல்தானபூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், சூரஜ் குமார் சோங்கரிடம் பணம் வாங்கி இருந்தார். மூன்று மாதங்கள் கழித்து தருவதாக கூறி, அந்த பெண் சுரஜ்குமாரிடம் பணம் வாங்கி இருந்தார். ஆனால், அந்த பெண்ணால் பணத்தை திரும்பி அளிக்க முடியவில்லை. இதனால், சூரஜ் குமாருக்கு பணத்திற்கு ஈடாக வேலை தருவதாக அந்த பெண் உறுதியளித்தார். ஆனால், அந்த பெண்ணால் வேலையை வாங்கி தர இயலவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சூரஜ் குமார், அந்த பெண்ணிடம் பலமுறை சண்டையிட்டிருக்கிறார். 


ஒரு கட்டத்தை டிசம்பர் 3ஆம் தேதி அந்ந பெண்ணை பார்க்க சென்றிருக்கிறார். அங்கு இருவருக்கு வேலை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், அந்த பெண்ணை சூரஜ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் முகத்தில் சிகரெட்டால் சூடு வைத்து, கோடாரியால் வெட்டி கொலை செய்து உள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது. பின்னர், சூரஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Crime:"என்னை கிண்டல் செய்வியா" - 8 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சிறுவன்! மகாராஷ்டிராவில் ஷாக்!


Crime:”BMW கார், 150 சவரன் கேட்டாங்க” வரதட்சணை கொடுமையால் இளம் மருத்துவர் தற்கொலை - கேரளாவில் கொடூரம்!